உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முகத்திரையை கிழிப்பேன்: பொன்முடி

முகத்திரையை கிழிப்பேன்: பொன்முடி

விழுப்புரம் : நில அபகரிப்பு வழக்கில் கைதான பொன்முடி விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், 'என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து உள்ளனர். மனித உரிமை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, நடவடிக்கை எடுத்து, பொய் புகார் கொடுத்தவர்களின் முகத்திரையை கிழிக்காமல் விடமாட்டேன்' என்றார். பொன்முடி மீது 409 - அரசு ஊழியராக இருந்து கையாடல் செய்தல், 420 - ஏமாற்றுதல், 465, 467, 468, 471 - போலி ஆவணங்கள் தயாரித்தல், 120 பி - கூட்டு சதி, 353 - அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், 506 (1) - கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய ஒன்பது பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை