உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்டுக்கல் மருதாநதி நீர்த்தேக்கம் இன்று திறப்பு

திண்டுக்கல் மருதாநதி நீர்த்தேக்கம் இன்று திறப்பு

சென்னை:மருதாநதி மற்றும் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து, இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.* திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமம், மருதாநிதி நீர்த்தேக்கத்தில் இருந்து, இன்று முதல் 120 நாட்களுக்கு, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு, தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்* ஈரோடு மாவட்டம், கொங்கர்பாளையம் கிராமம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து, வலது மற்றும் இடது கரை வாய்க்கால் வழியே, புன்செய் நிலங்களுக்கு, இன்று முதல் நவ. 4 வரை, 46 நாட்களில், 36 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில், தண்ணீர் திறந்துவிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி