உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் பெரிய ஜோசியக்காரர் தி.மு.க., கூட்டணியில் விரிசல் உறுதி வெயிட் அண்ட் சீ என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

ஸ்டாலின் பெரிய ஜோசியக்காரர் தி.மு.க., கூட்டணியில் விரிசல் உறுதி வெயிட் அண்ட் சீ என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை:''பெரிய ஜோசியக்காரர் போல ஸ்டாலின் பேசுகிறார். 'வெயிட் அண்ட் சீ' தி.மு.க., கூட்டணியில் நிச்சயம் விரிசல் ஏற்படும்,'' என, அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு இடத்தில் அவரது சிலைக்கு அ.தி.மு.க., சார்பில், 13.5 கிலோ எடை தங்கக்கவசம், 2014 முதல் அணிவிக்கப்பட்டு வருகிறது.மதுரை அண்ணாநகர் தனியார் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வரும் அந்த கவசத்தை, கட்சியின் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நேற்று நிர்வாகிகள் பெற்று, தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தனர்.துணை பொதுச்செயலர் நத்தம் விஸ்வநாதன், எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், சீனிவாசன் கூறியதாவது:கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் சொல்ல வேண்டியது. எல்லோரும் தனித்து நின்றால், அ.தி.மு.க.,வும் தனித்து நிற்க தயாராக உள்ளது. '2026 தேர்தலில் பழனிசாமி ஆட்சியை பிடிக்க முடியாது' என, தினகரன் கூறுகிறார். அவருக்கும், கட்சிக்கும் சம்பந்தமே கிடையாது. தொண்டன் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். 2026 தேர்தலில் மீண்டும் முதல்வராக பழனிசாமி நிச்சயம் வருவார்.விஜய் மாநாடு குறித்து பழனிசாமி கூறிவிட்டார். அதனால், 'நோ கமென்ட்ஸ்' பெரிய ஜோசியக்காரர் போல ஸ்டாலின் பேசுகிறார். தி.மு.க., கூட்டணியில் என்ன நடக்கும் என்று 'வெயிட் அண்ட் சீ' தி.மு.க.,வில் என்ன விவாதம் நடந்தாலும், விரிசல் ஏற்படுவது நிச்சயம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை