உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை; சொல்கிறார் ஓபிஎஸ்

கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை; சொல்கிறார் ஓபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். இதனை மீறிச் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை; அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. அதிமுகவை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.இந்தச் சூழ்நிலையில், வருகின்ற சட்டசபை பொதுத் தேர்தலை நாம் எதிர் கொள்ளும் வகையில், எம்ஜிஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டி தொட்டி எங்கு எடுத்துச் செல்லவும், திமுக ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அதிமுக அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கட்சி நிர்வாகிகள் நடத்த வேண்டும்.மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். இதனை மீறிச் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி குறித்த முடிவு கட்சி தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்ப தக்க நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும், இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Srinivasan
ஆக 04, 2025 07:43

சார்.. அவர் என்றும் சுய புத்தி முடிவுகள் எடுப்பது கிடையாது... EPS க்கு எதிராக அரசியல் செய்ய இவருக்கு தகுதி இல்லை.. பிஜேபி உதவி, திமுக உதவி, தினகரன் உதவி, கோர்ட் உதவி, இப்படி அடுத்தவர் வந்து தனக்கு கட்சி மீட்டு தர ஏங்குகிறார்.......


SP
ஆக 03, 2025 23:28

தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு என்ன செய்தது அதை சொல்ல வேண்டும் பழக்க தோஷம் அப்படி பேச வைக்கிறதோ என்னமோ?


T.sthivinayagam
ஆக 03, 2025 22:44

ஒபிஸ்யால் அண்ணாதிமுகாவால் சேர்த்துவிடபட்டவர் தான் நாகேந்திரன் ஆனால் புல்லபுச்சிக்கு எல்லாம் கோடுக்கு முலைக்கும் என ஓபிஸ் எதிர்பார்க்கவில்லை கலிகாலம்


Rajan A
ஆக 03, 2025 21:03

நடவடிக்கை எடுக்க அணியில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள். கொஞ்ச நாள் பொறு தலைவா, சர்க்கஸ் கூடாரம் காலியாகிவிடும்


Ramesh Sargam
ஆக 03, 2025 20:21

நாலு ஆப்பிள் பழங்களை வாங்கி கொண்டு முதல்வரை சந்தித்தபின்பு இவர் போக்கே ஒரு மாதிரிதான் இருக்கு. ஏதோ திமுக கூட்டணியில் முன்பு மாதிரி துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற கனவில் மிதக்கிறார் OPS.


திகழ்ஓவியன்
ஆக 03, 2025 20:12

எடப்பாடி முதலில் அண்ணாமலையை தூக்க சொன்னார் , அடுத்து பண்ணீர்செல்வம் தூக்கி அடித்தார் , இது தான் உண்மை


K.Ravi Chandran, Pudukkottai
ஆக 03, 2025 20:01

பட்டி தொட்டி எங்கும் தொண்டர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சாதனைகளை விளக்கிச் சொல்ல வேண்டும். ஆனால் இவரும் ,இவரது மகனும் கருணாநிதியின் சாதனைகள் பற்றி விளக்கமாகப் பேச காலையில் பூங்கா கேட்டையும் மாலையில் ஸ்டாலின் வீட்டு கேட்டையும் தட்டுவார்கள்.


Shankar
ஆக 03, 2025 19:03

உண்மை தான். தன்னோட கட்சியையே கொண்டுபோய் கோபாலபுரத்தில் அடகு வச்சாச்சு. இதுக்கு அப்புறம் எப்படி கூட்டணி குறித்து கட்சி தொண்டர்கள் பேசமுடியும்.


Rajan A
ஆக 03, 2025 21:04

கட்சி இல்லை அணி


suresh Sridharan
ஆக 03, 2025 18:44

O P அப்படி எல்லாம் சொன்னா இருக்குற மூணு பேரும் முட்டிக்கிட்டு ஓடி விடுவார்கள் எப்படியும் ஒரு இடத்தில் வாட்ச்மேன் வேலைக்கு போக போறீங்க வாழ்த்துக்கள் கூட ரெண்டு பேர் வேணும் இல்லையா


Roy
ஆக 03, 2025 18:43

செல்லா காசு OPS


புதிய வீடியோ