உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்மார்ட் பஜாரில் தள்ளுபடி விற்பனை

ஸ்மார்ட் பஜாரில் தள்ளுபடி விற்பனை

சென்னை:ஸ்மார்ட் பஜார் நிறுவனம், 'முழு பைசா வசூல்' என்ற பெயரில், அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் துவங்கிய இந்த தள்ளுபடி விற்பனை, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் பணத்தை அதிகம் சேமிக்கும் வாய்ப்பை, இந்த 'ஸ்மார்ட் பஜார்' வழங்குகிறது. நாடெங்கும் உள்ள, 900க்கும் அதிகமான, 'ஸ்மார்ட் பஜார்' ஸ்டோர்களில், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், பேஷன் பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகையை பெறலாம். ஐந்து கிலோ அரிசி, 3 லிட்டர் சமையல் எண்ணெய், 799 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. குளிர் பானங்கள் மூன்று வாங்கினால், ஒன்று இலவசம். துணி துவைக்க பயன்படும் டிடர்ஜென்ட்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி. இந்த சலுகையை வரும் 17ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என, ஸ்மார்ட் பஜார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை