உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டியல் இனத்தவர் முதல்வராக முடியுமா ? தினமலர் இணையதள டிவியில் விவாதம்

பட்டியல் இனத்தவர் முதல்வராக முடியுமா ? தினமலர் இணையதள டிவியில் விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. https://www.youtube.com/embed/WjU1BAfRYm4இன்றைய சிறப்பாக தமிழக முதல்வர் பதவியில் பட்டியலினத்தவர்கள் வர முடியுமா , முடியாதா, அன்புமணி, திருமாவளவன் பேசியது என்ற விஷயம் குறித்து இன்றைய சிறப்பு வீடியோவில் விவாதிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தத்வமசி
ஆக 17, 2024 22:00

யாராலும் முதல்வர் ஆகமுடியும் என்பது தான் இந்திய சட்டம். அதற்கு ஜாதி தேவையில்லை. மக்களின் பேராதரவு இருந்தால் போதுமானது. இப்போது அப்படிப்பட்ட ஒரு தலைவன் இவர்களில் இருக்கிறானா ? என்றால் பதில் கிடையாது. திருமா போன்றவர்கள் ஜாதீய வாதத்தை தூக்கிப் பிடிப்பதும் இல்லாமல், இந்து என்றால் விஷம் கக்கிப் பேசுகின்றனர். இவரை பின்பற்றும் தலித் மக்கள் திசை திருப்பி விடப் படுகிறார்கள். சரக்கு-மிடுக்கு, வெட்டு-கட்டு என்றெல்லாம் பேசினால் இவர்களுக்கு யார் ஒட்டு போடுவார்கள் ? திமுகவுடன் ஒட்டுக் கொண்டிருந்தால் தேர்தலில் வெல்லலாம் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் ஒட்டிக் கொண்டுள்ளார். தனியாக நின்றால் எத்தனை பஞ்சாயத்து உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என்று விரல் விட்டுத் தான் எண்ண வேண்டும்.


ராமகிருஷ்ணன்
ஆக 17, 2024 16:53

குருமா தனது தரமறிந்து பேச வேண்டும். 4 அல்லக்கைகள் கோரஸ் பாடுவதை பார்த்து கனவு காணுவதை எல்லாம் வெளியில் புலம்ப கூடாது.


TSRSethu
ஆக 17, 2024 11:22

பட்டியல் இனத்தவர் முதல்வராக முடியும். ஒற்றுமையாக இருந்தால். நான்கைந்து கட்சிகளாக பிரிந்து தனி நபர்களின் நலனுக்காக திராவிட கட்சிகள் பின்னால் போனால் நடக்க வாய்ப்பில்லை.


ஆரூர் ரங்
ஆக 17, 2024 12:19

70 சதவீதம் இருக்கும் BC மக்களிடம் சர்வே எடுங்க. தப்பித்தவறி சப்போர்ட் பண்றாங்களான்னு பாருங்க.


TSRSethu
ஆக 17, 2024 11:19

ஆக முடியும். ஒற்றுமையாக இருந்தால் முடியும். தனிநபர்களின் திருப்திக்காக திராவிடத்திற்கு துணைபோனால் நடக்காது.


Ramesh Sargam
ஆக 17, 2024 10:50

திறமையுள்ளவர்கள், நேர்மையானவர்கள் எந்த இனத்தை சேர்தவர்களாக இருந்தாலும் முதல்வராக நியமிக்கப்படவேண்டும். நாம் எல்லாம் ஒரே இனம் - மனித இனம்.


பிரேம்ஜி
ஆக 17, 2024 10:49

வெட்டி விவாதம். அன்புமணி எப்படியும் யார் தயவிலாவது பாமக அரசை ஏற்படுத்த வெறியில் இருக்கிறார். வரமாட்டார். வந்த பின் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தாழ்த்தப்பட்டோர்களை சேர்த்து கொள்ள மாட்டார். சோழியன் குடுமி சும்மா ஆடாது.


Barakat Ali
ஆக 17, 2024 10:48

திமுக என்னை முதல்வாக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார் திருமா ......... அதன்மூலம் அதிமுக அன்னிக்குத் தாவப்போவதைச் சொல்லாமல் சொல்கிறார் ..... இதுதான் உண்மை ......


Rajarajan
ஆக 17, 2024 10:43

ஆசைக்கு வெட்கம் இல்லை. தனக்கு துணை முதல்வர் அல்லது முதல்வர் பதவி வேண்டும் என, திருமா. நேரிடையாக கேட்க தயங்கி, இப்படி கிளப்பி விடுகிறார். ஜனநாயகத்தை பற்றி மூச்சுக்கு முன்னூறு முறை கோடிட்டு காட்டும் திருமாவுக்கு தெரியாதா ?? ஜனநாயக நாட்டை மக்கள் தேர்ந்தெடுத்தால் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என்று ?? ஆசைக்கு வெட்கமில்லை. ஆகமொத்தம், பதவி தரவில்லையெனில், அடுத்த தேர்தலில் இதை வைத்து வேறு கூட்டணிக்கு வெளியேற காரணம். அதுசரி, விஜயகாந்துடன் நீங்கள் கூட்டணி சேர்ந்த போது, நச்சுப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என்று திராவிட கட்சிகளை விமர்சித்துவிட்டு, அவர்களிடமே தற்போது பதவி கையேந்த வெட்கமாக இல்லையா ?? ஆம், எல்லாம் பதவி ஆசை படுத்தும் பாடு.


Indian
ஆக 17, 2024 10:30

என்னங்க பட்டியல் இனம் , பட்டியல்ல இல்லாத இனம் னு பிரிகிறங்க ??? . இப்படியே பேசி பேசி நாடை நாசமாகியது தான் மிச்சம் ..


ஆரூர் ரங்
ஆக 17, 2024 10:24

நிரந்தரமாக OBC மட்டுமே முதல்வராகக முடியும். மற்றவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவே முடியாது. எனவே தீண்டாமை வன்கொடுமை ஆணவக்கொலை குறைய வாய்ப்பில்லை.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ