உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி மனு நிராகரிப்பு

செந்தில் பாலாஜி மனு நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சி.பி.சி.ஐ.டி., வழக்குப் பதிவு செய்தது.எம்.பி., - எம்.எல்.ஏ., க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இதன் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கும்படி, செந்தில் பாலாஜி தரப்பில் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நிலுவையில் உள்ளது.இதற்கிடையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவின் விசாரணை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முடிந்துள்ளது.மேல்முறையீடு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பை தள்ளி வைக்கக்கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி அல்லி நேற்று தள்ளுபடி செய்தார்.விடுவிக்கக் கோரிய மனுவின் உத்தரவை, வரும் 16ம் தேதி பிறப்பிப்பதாக தெரிவித்ததோடு, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும், வரும் 16ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Godyes
ஜூலை 13, 2024 04:05

எதுக்கு இப்படி ஆண்டு கணக்கா கேச இசுக்கரீங்க.கேஸ முடியாதா.


Jai
ஜூலை 12, 2024 22:44

அனைத்திந்திய ஜாமீன் சாதனை ஏதும் நிகழ்த்தப்பட்டதா?


Maheesh
ஜூலை 12, 2024 22:40

செந்தில் பாலாஜி அவர்கள் பொன்முடியார் வழியில் எளிதாக செல்லலாம். தண்டனை பெற்று கொண்டு பிறகு சப்பை காரணத்தை காண்பித்து உநீ தண்டனை நிறுத்தி வைக்கலாம். பிறகு மீண்டும் மந்திரி ஆகிவிடலாம். தேவைப்பட்டால் கவர்னருக்கு கண்டத்தையும் உநீ கொடுக்கும், பதவியேற்பு செய்யவில்லையென்றால்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 12, 2024 21:34

வக்கீல்கள் காட்டில் நல்ல மழை . இரும்புக்கரணத்தின் ஆட்சில் இவரது தம்பியை இன்னும் கண்டுபிடிக்க தமிழக போலீசால் முடியவில்லை.


Sck
ஜூலை 12, 2024 21:25

பேசாம, சாகும்வரை சிறை தண்டனை என்று சொல்லிடுங்க மரியாதைகுரிய கனம் நீதிபதி அவர்களே. குற்றவாளி தினம் ஒரு மனு போட்டுக்கிட்டே இருக்கான்.


Senthil K
ஜூலை 12, 2024 20:44

புழலுக்கே பயந்துட்டா எப்படி?? அடுத்து திகார் வரப்போகிறது... முதலில் நெஞ்சு வலி... அடுத்து.. குடல் வலியா??


raja
ஜூலை 12, 2024 20:22

அண்ணன் அணிலார் ஆயுளுக்கும் புழல் தான்...


Pandi Muni
ஜூலை 12, 2024 19:35

அணிலு அடுத்து வாராது எலி


Mani Nagarajan
ஜூலை 12, 2024 18:12

why waste court time apply again and again really wasting time those this type of cases.


Ramesh Sargam
ஜூலை 12, 2024 17:38

காலம் முழுவதும் சிறைவாசம்தான். மற்ற அயோக்கியர்களும் இதுபோல தண்டிக்கப்படவேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ