உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரிசி கடத்தலுக்கு உதவும் ரேஷன் ஊழியர்கள் டிஸ்மிஸ்?

அரிசி கடத்தலுக்கு உதவும் ரேஷன் ஊழியர்கள் டிஸ்மிஸ்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போகும் ரேஷன் கடை ஊழியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய, கூட்டுறவு மற்றும் உணவு துறை முடிவு செய்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில் மாதம், 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமையும்; மானிய விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயிலும் வழங்கப்படுகின்றன. உணவு மானியமாக ஆண்டுக்கு, 10,500 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.பல அரிசி கார்டுதாரர்கள், அரிசி தவிர்த்த மற்ற பொருட்களை வாங்குகின்றனர். அவர்களுக்கு உரிய அரிசியை விற்றது போல் சில ரேஷன் கடைகள், விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து, வியாபாரிகள், பிற மாநிலத்தவர்களிடம் விற்கின்றனர். இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கார்டுதாரர்களுக்கு உரிய பொருட்கள் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன; எந்த பொருட்களை வாங்க வேண்டும், வாங்கக் கூடாது என்பது அவர்களின் விருப்பம். சிலர் அரிசி வாங்குவதில்லை; ஆனால், அவர்களிடம் அரிசி விற்றது போல் பதிவு செய்து, தவறு செய்கின்றனர். கடைகளில் உள்ள பதிவை விட இருப்பு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. சிலர் அந்த அபராதத்தையும் செலுத்தி, தவறு செய்கின்றனர். எனவே, கடைகளில் ஆய்வுக்கு செல்லும் போது அடிக்கடி புகாருக்கு உள்ளாகும் ஊழியர்களின் விபரம் அடங்கிய பட்டியல் தயாரித்து, அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அரிசி கடத்தலில் பிடிபடும்பட்சத்தில் நடத்தப்படும் விசாரணையில், அதில் ரேஷன் ஊழியருக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்கள் மீது இடமாறுதல், அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைக்கு பதில், நிரந்தர பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தமிழ்வேள்
மே 24, 2024 17:30

ஆளும் கட்சியின் லோக்கல் கிளை ,வட்டம் வார்டு பயல்களுக்கு அவ்வப்போது ரொக்கம் கொடுத்து உதவுவது , சர்க்கரை , அரிசி வகையறாக்களை அவர்கள் சொல்லும் ஆட்களுக்கு கொடுத்து balk ஆக சில்லறை பார்ப்பதும் ரேஷன் கடை ஆசாமிகள் தான் . ரேஷன் கடை ஆட்களை டிஸ்மிஸ் செய்தால் , அவன் இந்த பிரஹஸ்பதிகளை பற்றி போட்டு கொடுத்தால் என்ன ஆகும் ? ஆகவே , இந்த டிஸ்மிஸ் எல்லாம் சும்மா உருட்டல் மிரட்டல்தான் ..கூட காசு கொடு என்று பொருள் ..காசு வந்துவிட்டால் , புகார் கொடுத்தவன் கதி அதோகதி ...ஆகவே இந்த டிஸ்மிஸ் வேலையெல்லாம் கதைக்காகாது


Lion Drsekar
மே 24, 2024 13:14

ரேஷன் கடைகளில் வயது முதிர்ந்த வயது உள்ளவருக்கு பொருள் கொடுக்க குடும்பத்தாரை அனுப்பினால் கொடுக்க மறுக்கிறார்கள் ஆனால் கார்டே இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் எல்லா கடைகளிலும் கொடுக்கின்றனர் இதுதான் நாம் பெற்ற சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சி இது மட்டுமா இன்னமும் சாராயக்கடைகளில் எல்லா கடைகளிலும் முன்பு வாங்கியதை விட அதிகமாக லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னையில் தி நகரில் எலைட் கடையில் பெரிய பாட்டிலுக்கு ரூபாய் அதிக விலைக்கு வாங்குகிறார்கள் இது தொடர்பாக உயர் மட்ட அதிகாரிக்கு தொடர்பு கொண்டால் அவர்களின் உதவியாளர் புகார் எண்ணைக் கொடுத்து அங்குதான் புகார் செய்யவேண்டும் என்று கூறுகிறார் எத்தினை பேரைத்தான் டிஸ்மிஸ் செய்யமுடியும் ? நல்லது நடந்தால் பாராட்டலாம் வந்தே மாதரம்


vijay
மே 24, 2024 10:56

அப்போ அந்த கடத்தலுக்கு பின்னாடி மூளையாக இருக்கும் பெரும்புள்ளிகள்? பெரும்புள்ளிகள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் பெரும்புள்ளிகளாக இருப்பார்கள் கடத்தல் பற்றி அத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தெரியாமலா இருக்கும் ஆட்சி அமைந்தால் உடனே வண்டிகட்டிக்கொண்டு ஆற்று மணலை அள்ளிச் செல்லலாம், தடுப்பவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வெளிப்படையாக சவடால் விட்டவர் இப்போது புழல் சிறை பைனாப்பில் கேசரி புகழ் கைதியாகிவிட்டார் முதலில் கட்சி பெரும்புள்ளிகளையும், அதிகாரிகளையும் தண்டியுங்கள்


ramesh
மே 24, 2024 10:10

இந்த சட்டத்தை போடும் உயர் அதிகாரிகள் ரேஷன் கடையில வேலை பார்க்கும் கடைசி மட்ட ஊழியர்களிடம் மிரட்டி வேண்டியதை வாங்காமல் இருந்தால் இவ்வளவு பெரிய தப்பு நடக்காது


rama adhavan
மே 24, 2024 06:45

நடந்தால் நல்லது ரேஷன் ஊழியர்கள் என்னும் ஒணான் தான் ஆளும் கட்சி அரசியல் வாதிகளுடன் சேர்ந்து ரேஷன் பயிர் வேலியை இது நாள் வரை மெயிந்து கொண்டு இருக்கிறது


Kasimani Baskaran
மே 24, 2024 05:47

இவ்வளவு நாளும் கடத்திக்கொண்டுதான் இருந்தார்கள் இன்று மட்டும் என்ன திடீர் நடவடிக்கை?


Sankar Ramu
மே 24, 2024 05:40

அப்ப மாவட்டம் , எம் எல் ஏ, மந்திரிக்கு எல்லாம் ?


இறைவி
மே 24, 2024 05:34

இம்மாதிரி அரிசி கடத்தலுக்கு முக்கிய காரணியே இரண்டு கழகங்களும்தான். வருமான வரி கட்டுபவர்களும், சொந்தமாக சாகுபடி நிலம் வைத்திருப்பவர்களுக்கும் சாதாரண ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்றிக் கொடுத்தவர்களே இவர்கள்தான். பொங்கல் தொகுப்பு பணம், மழை வெள்ள நிவாரண பணம் இவைகள் கிடைக்கும் என்பதால் எல்லோரும் தங்கள் ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்றிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் யாரும் அரிசி வாங்குவதில்லை. அரிசிக்கு மட்டும் இந்த பிரச்சனை இல்லை. பாமாயில் வாங்காத போதும் இப்படித்தான் பில் போடப்பட்டு டீ கடைகளுக்கு விற்பனை செய்யப் படுகிறது. இதில் ரேஷன் கடை ஊழியர்களை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. அவர்களுக்கு வேலை கிடைக்கவே கட்சி ஆட்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும். அந்த பணத்தை எப்படி சம்பாதிப்பது. அரசு கொடுக்கும் சம்பளத்தில் சத்தியமாக முடியாது. இப்படித்தான் சம்பாதிக்க முடியும். அது மட்டுமின்றி ரேஷன் அரிசியை கார்டு தாரர்களிடமிருந்தும் ஐந்து ரூபாய் ஆறு ரூபாய் என்று விலைக்கு வாங்கி அதனை அரவை மில்லில் மீண்டும் ஒரு பாலிஷ் ஏற்றி அரிசி கடைகளுக்கு நான்கு மடங்கு லாபத்திற்கு விற்கிறார்கள். பாலிஷ் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை மக்கள் ஐம்பது முதல் எழுபது ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரேஷன் கார்டை ஆதார் கர்டுடன் இணைத்தது மூலம் தமிழகத்தில் பத்து லட்சம் போலி கார்டுகள் ஒழிக்கப் பட்டது. அது போல பான் கார்டு, நில பட்டாகளையும் இணைத்தால் தமிழக அரிசி தேவை பாதியாக குறைந்துவிடும். மேலும் அறு கொடுக்கும் தொகுப்பு செலவும் பெரிய அளவில் குறையும்.


மேலும் செய்திகள்