வீடுகளுக்கு ரேஷன் பொருள் நவ., 3, 4ல் வினியோகம்
சென்னை:தமிழகத்தில், முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு, அத்தியாவசிய உணவு பொருட்கள் நேரடியாக வினியோகம் செய்யப்படுகின்றன. இந்த பணியில், மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளதால், பல மாவட்டங்களில் மழை பெய்கிறது. எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே, அதாவது, 3, 4ம் தேதிகளில், வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை மேற்கொள்ளுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.