உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட்

காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட்

சென்னை: காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்ய தவறியதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் என்பவரை சிறையில் அடைக்க, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, காஞ்சிபுரம் எஸ்.பி., - டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதி மன்றம், டி.எஸ்.பி., சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9vjbzw5c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், 'சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்த தாக இருக்காது என்பதால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க, விசாரணை அறிக்கையை பணியிட மாற்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்' என்றும் உத்தரவிட்டப்பட்டது. முன்பகை விவகாரத்தில், காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், அரியலுார் மாவட்ட லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து நீதிபதி செம்மலை சஸ்பெண்ட் செய்து உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Raja
டிச 12, 2025 17:06

இதே போல் திருப்பரங்குன்றம் மலை மீது சர்வே கல்லில் தீபம் ஏற்ற சொன்ன நீதிபதியை


Sundar
டிச 12, 2025 08:39

இந்த காஞ்சிபுரம் கோர்ட் விஷயம் சுப்ரீம் கோர்ட் வரை அப்பீல் மனு என்று போய் அங்கு கோர்ட் கவனத்திற்கு வந்து விட்டது. JURISDICTION (அதிகார வரம்பு) என்பது என்ன என்றும், அதை எப்படி என்ன விதத்தில் (procedures) செயல்படுத்த வேண்டும் என்பதும் புரியவில்லை. முன்பு P.H. பாண்டியன் என்பவர் சொன்னார் எனக்கு வானை முட்டும் அளவுக்கு அதிகாரம் இருக்கு என்று.


Balaji Seshan
டிச 12, 2025 07:04

ரொம்ப நல்ல கேள்வி.. இதற்கு பதில் இல்லை அனைவரும் வாயை முடி கொள்ள வேண்டும்


Ramesh Sargam
டிச 11, 2025 20:39

திருப்பங்குன்ற தீப வழக்கில் நீதிபதி ஸ்வாமிநாதன் தீர்ப்பை ஏற்கமறுத்த முதல்வரை உச்சநீதிமன்றம் முதல்வர் பதவிலியிருந்து நீக்குமா?


Subbian Premavathy
டிச 12, 2025 09:25

கருத்து சொல்ல எனக்கு தகுதி இல்லை


r ravichandran
டிச 11, 2025 18:30

பழைய பகையை மனதில் வைத்து கொண்டு கைது நடவடிக்கை எடுத்த இவரை போன்றவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் தான். சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி என்று பாராமல் நியாயம் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.


Balaji
டிச 11, 2025 20:14

பழைய பகை, என்று கூறப்பட்டுள்ளது. அது பற்றிய எந்த தகவலும் இல்லை


சத்யநாராயணன்
டிச 11, 2025 17:22

அப்படி என்றால் கோர்டின் உத்தரவுகளை மதிக்காத திருப்பரங்குன்றம் போலீசார்களை என்ன செய்ய வேண்டும் நீதிபதிகளுக்கு ஒரு நியாயம், போலீஸ்காரர்களுக்கு வேறொரு நியாயமா


Kumar Kumzi
டிச 11, 2025 17:12

இதா மாடல் ஆட்சி


sankaranarayanan
டிச 11, 2025 22:11

மாவட்ட நீதிபதியை அரசின் தூண்டுதலினால் கைது செய்தது முதல் அத்திகியாயம் பிறகு உயர் நீதிமன்ற நீதிபதியை கைது செய்ய அரசே முயல்வது இரண்டாவது அத்தியாயம் அதற்குள் அரசே கவிழ்ந்துவிடும் அல்லது நீக்கப்படும்


அப்பாவி
டிச 11, 2025 17:08

நாசமா போறதுக்கு இதுதான் முக்கிய காரணம். ஒருத்தனையும் கடமையை செய்ய உடமாட்டாங்க. தப்பித் தவறி செஞ்சா ஆப்புதான்.


GMM
டிச 11, 2025 17:06

தமிழக நீதிபதி சுவாமிநாதனை நீக்க பாராளுமன்றத்தில் திமுக கொண்டுவந்த தீர்மானம். மாவட்ட நீதிபதி நீக்க சட்டமன்ற தீர்மானம் வேண்டாமா? மாநில சட்ட ஒப்புதல் கவர்னர். சட்டம் கீழ் பணி செய்யும் மாவட்ட நீதிபதியை நீக்க கவர்னர் ஒப்புதல் அவசியம்? மாவட்ட போலீஸ் போல் மாவட்ட நீதிபதிகள் புகார் செய்தால், யார் மீது நடவடிக்கை.? சட்டம், நிர்வாக ஒழுங்கு தேவையில்லாத மாநிலம், தமிழகம்.


sundarsvpr
டிச 11, 2025 16:35

நீதிபதியை பாராட்டலாம். இவர் அரசு நிர்வாகத்தை கண்காணித்தால் எல்லா அமைச்சர்களை நிச்சியம் தற்காலிக பதவி நீக்கம் செய்வார். தமிழ்நாட்டு நிர்வாகம் தமிழ்நாட்டு வாக்காளர்களால் சரியாக கண்காணிக்கப்படவில்லை என்பது நிசர்சன உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை