உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

சென்னை:ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு, நேற்று உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு உபசார விழா நடந்தது.விழாவில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ஏற்புரையாற்றி பேசியதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைகிறேன்.ஒன்பது மாத பதவி காலத்தில், அதிக அளவில் கற்றுக் கொண்டுள்ளேன். முழு திருப்தியுடன் விடை பெறுகிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதேபோல், ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். தமிழக நீதித்துறையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 213 நீதிபதிகளில், 130 நீதிபதிகள் பெண்கள். இதற்கு தமிழகத்தை பாராட்டுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவின் பதவியேற்பு நிகழ்ச்சி, வரும் 21ம் தேதி மாலை, கவர்னர் மாளிகையில் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை