உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரவெடி தீபாவளி; இந்தாண்டு ரூ.7,000 கோடி பட்டாசுகள் விற்பனை

சரவெடி தீபாவளி; இந்தாண்டு ரூ.7,000 கோடி பட்டாசுகள் விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசுகள் வணிக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் புத்தாடை அணிந்து, விதவிதமான பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது அனைவரின் வழக்கம்.இந்தாண்டு தீபாவளி பண்டிகையை சிவகாசி, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் மக்கள் படையெடுத்து சென்று பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்தன. ஆண்டுதோறும் புதுப்புது ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பீட்சா, வாட்டர்மெலன் உள்ளிட்ட பல்வேறு வகை பட்டாசுகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையான நிலையில், இந்தாண்டு கூடுதலாக ரூ.1,000 கோடி விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக டில்லியில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாகவும் பட்டாசு விற்பனை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ram pollachi
அக் 21, 2025 13:03

ஒரு கிலோ பட்டாசு ரூ.499/- என்று விளம்பரம் செய்து மக்களை கடை பக்கம் இழுத்தார்கள்.... பொதுவாக நேர கட்டுப்பாடு மற்றும் மழை காரணமாக வெடி சத்தம் குறைந்துவிட்டது.... துணி மற்றும் இனிப்பு வியாபாரம் அதிகம்.... கூட்டம் கூட்டமாக ஊரை சுற்றி கதை பேசி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள்.


அப்பாவி
அக் 20, 2025 15:57

இத்தனை வெடியை வெச்சு ஒரு நாட்டையே கொளுத்தலாம்.


வாய்மையே வெல்லும்
அக் 20, 2025 18:49

நீங்க பக்ரீத் விருந்து வைக்கும்போது .. ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து ஆடுமாடு கொல்வது பார்க்கும்போது இது ஜுஜுபி


Vijay,covai
அக் 20, 2025 15:29

Sanaadhanathai Olicka ninaicha theeyamukavai mudhalil olipom


Vasan
அக் 20, 2025 12:23

பட்டாசு விலை மிக மிக அதிகமாக உள்ளது. தங்கம் போல் விலை உயர்ந்துள்ளது. ஸ்டாண்டர்ட் பட்டாசு விலைப்பட்டியல். தரை சக்கரம் 10 அடங்கிய ஒரு பாக்கெட் 1381 ரூபாய். புஸ்வாணம் 10 அடங்கிய ஒரு பாக்கெட் 1277 ரூபாய். கம்பி மத்தாப்பு 10 அடங்கிய ஒரு பாக்கெட் 506 ரூபாய். இப்படி இருந்தால், ஏழை எளிய மக்கள் எப்படி வாங்க முடியும்? மற்ற பணக்காரர்கள் வெடிப்பதை வேடிக்கை தான் பார்க்க முடியும்.


ஆரூர் ரங்
அக் 20, 2025 14:49

பட்டாசு தயாரிப்பவர்கள், ஊழியர்கள், விற்பவர்கள் எல்லாருமே தமிழர்களே. யாரைக் குற்றம் கூறுகிறீர்கள்?.


Kannan Chandran
அக் 20, 2025 16:58

10 சக்கரம் அடங்கிய பாக்கெட் 75 சிறியது & 99 பெரியது, புஸ்வானம் பாக்கெட் 60 &110, கம்பி மத்தாப்பு பாக்கெட் 15 & 45 - இதுதான் வாங்கிய விலை,


Thravisham
அக் 21, 2025 07:23

அதற்கு ஒரே தீர்வு சீனாவைப் போல் தானியங்கி மெஷின் மூலம் உற்பத்தி செய்தால் விலை ஒரேடியாக குறையும்.


Srinivasan Guru Murthy
அக் 20, 2025 12:16

7000 கோடி ரூபாய் கரியாகி விட்டது.


N Sasikumar Yadhav
அக் 20, 2025 12:36

உன்னுடைய திராவிட மூளைக்கு எட்டியது அவ்வளவுதான். அந்த 7000 கோடியில் எத்தனை ஆயிரம் கோடி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியது என உன்னுடைய மூளைக்கு எட்டாது


Mani
அக் 20, 2025 13:27

செலிப்ரட்டின்


Kumar Kumzi
அக் 20, 2025 14:01

டாஸ்மாக்கில் ஐம்பதாயிரம் கொட்டுனியே அது எங்க கோபாலபுரம் கல்லா பெட்டிக்குள் போச்சா


சமீபத்திய செய்தி