உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளியை கொண்டாட காரில் ஊருக்கு போகிறீர்களா? சென்னை போலீஸ் முக்கிய அறிவிப்பு

தீபாவளியை கொண்டாட காரில் ஊருக்கு போகிறீர்களா? சென்னை போலீஸ் முக்கிய அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு காரில் செல்பவர்கள் எந்த வழித்தடத்தை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.தீபாவளி பண்டிகை அக்.31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான நாள் நெருங்கி வருவதால் சென்னை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பகங்களில் மக்கள் குவிய ஆரம்பித்துள்ளனர். தலைநகர் சென்னை தவிர்த்து மற்ற நகரங்களிலும் மக்கள் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாட ஏராளமான மக்கள் திட்டமிட்டு உள்ளனர். ரயில்கள், பஸ்களில் இப்போது டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். டிக்கெட் கிடைக்காதவர்கள் கார்களில் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க முடிவு செய்துள்ளனர்.அவர்களுக்காக சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் பாதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு பயணிக்கலாம். இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தவிர்த்து, பயணத்தை இனிதாக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருக்கிறது. பொதுமக்கள் இந்த அறிவுரையை பின்பற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தமிழ்வேள்
அக் 22, 2024 13:52

திருப்போரூர் -திருக்கழுக்குன்றம் -வழியாக மதுராந்தகம் வரை சென்று விடலாமே ?


theruvasagan
அக் 21, 2024 22:30

அரசாங்கம்தான் சொல்லணும்னு இல்லை. என் பங்குக்கு நானும் ஒரு யோசனை சொல்றேன். தெற்கு பக்கம் போறவங்க சென்னையிலிருந்து கிளம்பி புழல் ரெட்ஹில்ஸ் கும்மிடிபூண்டி தடா வரைக்கும் போங்க. அங்கேயிருந்து திருப்தி போற ரூட்ல ரேணிகுண்டா போய் அங்கிருந்து அரக்கோணம் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ரூட்டை புடிச்சா ஜிஎஸ்டி ரோடுல சேர்ந்துடலாம். அதற்கப்புறம் அவங்கவங்க போற ஊருக்கு ஈஸியா போயிடலாம். என்ன சரிதானே.


theruvasagan
அக் 21, 2024 22:20

சென்னையிலிருந்து பண்டிகைக்கு ஊருக்கு கிளம்புற கூட்டத்தை பார்த்தால் சிங்கப்பெருமாள் கோயில் தாண்டுவதற்குள்ளேயே தீபாவளி வந்துட்டு போயிடும்.


M Ramachandran
அக் 21, 2024 20:40

தாம்பரம் படப்பை ஒரகடம் வாலாஜாபாத் கூடலூர் அங்கிருந்து உத்திரமேரூர்- மாமண்டூர் ரோடு வழியாக GST ரோடுக்கு சென்று சேரலாம் அதாவது படலாம் ரோடு சந்திப்பிற்கருகில் சேறலாம்.


gopi
அக் 22, 2024 06:26

படப்பை பகுதியை தாண்டுவதற்கு மட்டும் ஒரு மணி நேரம் ஆகும், மேம்பால பணி ஆமை வேகத்தில் நடக்குது...மத்தபடி இந்த ரூட் ok


Ramesh Sargam
அக் 21, 2024 19:53

ECR மற்றும் Old Mahabalipuram சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லையா...? அங்கும் அதிக நெரிசலை காணலாம். அப்புறம் ஸ்ரீலங்கா வழியாக செல்லுங்கள் என்று சென்னை போலீஸ் கூறினாலும் கூறும்.


சாண்டில்யன்
அக் 21, 2024 20:58

லங்கன் ராணுவம் எல்லைதாண்டி வந்ததா அள்ளிக்கிட்டு போயிடும் பிறகு நம்ம NIA வெளிநாட்டு சதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை இன்னும் ஏதேதோ சொல்லி பல கோணங்களில் விசாரனை முடியலேங்கிற பேரில் நமக்கு ஜாமீன்கூட கிடைக்காதே தேவலையா


Sathyanarayanan Sathyasekaren
அக் 21, 2024 19:34

மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை மூலமாக வண்டலூரை அடையலாம், நான் இந்த பாதையை தான் உபயோகிக்கிறேன், இன்னொரு சாலையும் உள்ளது, மாம்பாக்கம் கொளத்தூர் வழியாக செங்கல்பட்டு வரலாம், இதனால் ஒரு டோல் சார்ஜ் கூட மிச்சமாகும்.


ஆரூர் ரங்
அக் 21, 2024 18:33

சென்னையிலேயே கொண்டாடும் வெளியூர் மக்கள் நீடூழி வாழ்க. உலகில் சிறந்த தர்மம் பிறருக்கு இடைஞ்சலாக இல்லாமல் விட்டுக் கொடுத்து வாழ்வது.


சாண்டில்யன்
அக் 22, 2024 05:06

வேதம் புதிது அப்போ தீயமுகவே ஆண்டுட்டு போகட்டும்


என்றும் இந்தியன்
அக் 21, 2024 17:57

திருட்டு திராவிட மடியல் அரசு போலீஸ் அடிமை அறிவிப்பு 1 இந்துக்கள் பண்டிகை என்றால் இப்படி இப்படி என்று கட்டுப்பாடு 2 RSS ஊர்வலம் என்றால் இந்த இந்த கட்டுப்பாடுகள்


சாண்டில்யன்
அக் 21, 2024 18:42

உங்க விருப்பப் படி போனால் டிராபிக்கில் சிக்கி ரெண்டே நாளில் ஊர் போய்விடலாம் ஹையா ஜாலி


ponssasi
அக் 21, 2024 16:51

மெட்ரோவை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீடிக்கவேண்டும், தாம்பரம் கடற்கரை ரயில் போல கடற்கரை டு செங்கல்பட்டு ரயில் சேவை இருக்கவேண்டும். இருபத்தி ஐந்து சதவீத பேருந்துகள் பரனூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படவேண்டும். சென்னை நெரிசலை குறைக்கலாம். பேருந்துகள் இந்த சாலை மார்க்கமாகத்தான் பயணிக்கவேண்டும் என்றில்லாமல் எந்த சாலை நெரிசல் இல்லாமல் இருக்கிறதோ அதில் பயணித்து இலக்கை அடையவேண்டும்.


சாண்டில்யன்
அக் 21, 2024 20:54

மாநகர பேருந்து இல்லை ஆட்டோ பிறகு மெட்ரோ ரயில் அதிலிருந்து மறுபடி பேருந்து இப்டீ குரங்குமாதிரி தாவி தாவி போறதுக்கு ஒண்ணா ரயில்லேயே போய்த்தொலைலாமே ஆனா இப்போ ரயிலும் நிலைமை சரியில்லே நாம ஒரேயடியா போய்டணும்னு நினைக்குது என்ன பண்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை