உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி கூட்ட நெரிசல்: முன்பதிவில்லா 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி கூட்ட நெரிசல்: முன்பதிவில்லா 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் நலன் கருதி, சென்னையில் இருந்து முன்பதிவு இல்லா, 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.இதன்படி, சென்னை எழும்பூர்- திருச்சி சிறப்பு ரயில் இன்று(அக்.30) இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 5.45 மணிக்கு திருச்சி சென்று அடையும்.அதாவது, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலுார், பரங்கிபேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று சேரும்.*தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில்(06157) இயக்கப்படும்.*எழும்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சை, வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில்(06155) இயக்கப்படும்.சென்னை சென்ட்ரல்-கோவைசென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம், திருப்பத்தூர், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்(06159) இயக்கப்பட உள்ளதுதிருச்சி- தாம்பரம் சிறப்பு ரயில்நாளை(அக்.31) பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.45 மணிக்கு தாம்பரம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
அக் 31, 2024 04:09

வர்ர கும்பலுக்கு 10 கபல் விட்டாலும் போறாது கோபால்.


RAAJ68
அக் 30, 2024 21:55

சென்னையின் அவலமும் தீபாவளி ஜோக்கும்....... தீபாவளிக்கு ஒரு நாள் தான் விடுமுறை எனக்கு. கிளாம் பாக்கம் வரை தான் வர முடியும் ஆகவே நீங்கள் எல்லோரும் கிலாம் பக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டால் அங்கேயே தீபாவளி கொண்டாடிவிட்டு நீங்க அப்படியே திரும்பி போங்க நாங்க இப்படியே திரும்பிடறோம்.


Ramesh Sargam
அக் 30, 2024 21:00

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் பத்திரமாக பயணித்து பண்டிகையை குடும்பத்தினருடன், நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு, பத்திரமாக திரும்பவும். ரயிலில் முட்டிமோத்தி இடம் பிடிக்க முயன்று, ஒருவருக்கொருவர் சண்டை செய்யாதீர்கள்.


K.n. Dhasarathan
அக் 30, 2024 19:31

ரயில்வே துறை இன்னும் ஐம்பது ஆண்டுகள் பழமையாகவே உள்ளது, தீபாவளிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக ஊருக்கு சென்று திரும்புவார்கள் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும், சிறப்பு ரைல்களை ஒருவாரம் முன்பாகவே ஆரம்பிக்கலாம், சரியான முறையில் முன் அறிவிப்பு கொடுக்கலாம், விளம்பரம் செய்யலாம், ஒன்றுமே செய்யவில்லை, தீபாவளி அன்று இரவில் ரயில் விடுகிறார்களாம், இவர்களை எந்த வகையில் சேர்க்கலாம், ? ரயில்வேக்கு மிகுந்த நட்டம், சரியான நீர்வாகிகள் இருந்தால் ரயில்வேயில் லாபம் கொட்டும். நிர்வாகம் சீர்படுத்தப்படணும்.


சமீபத்திய செய்தி