உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் காட்டிய அக்கறை: பிரேமலதா நெகிழ்ச்சி

பிரதமர் காட்டிய அக்கறை: பிரேமலதா நெகிழ்ச்சி

சென்னை; தமிழகத்தின் சிங்கம் என்று விஜயகாந்தை பிரதமர் மோடி அன்போடு அழைப்பார் என்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் நகர ஆரம்பித்துள்ளன. அ.தி.மு.க.,, பா.ஜ., இடையே கூட்டணி அமைந்துவிட்டது. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று அண்மையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்து இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dyj4jqvz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில் பிரதமர் மோடியை புகழ்ந்து அவர் அளித்த பேட்டி ஒன்றை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று பிரதமர் அழைப்பார் என்று கூறி உள்ளார். பிரேமலதா மேலும் கூறி இருப்பதாவது; விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும், மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. 'தமிழகத்தின் சிங்கம்' என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று. இவ்வாறு பிரேமலதா கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
ஏப் 14, 2025 21:02

கூட்டணியில் சேறலாம் ஆனால் கண்டிஷன் போடக்கூடாது கொடுத்ததை வாங்கிக்கொண்டு கூட்டணிக்கு மனசார உழைக்கணும் எங்களுக்கு அசெம்பிளி ஸீட்டில் 100-வேண்டும் எம்.பி. சீட்டி 10-வேண்டும் என்பதலேல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது


Haja Kuthubdeen
ஏப் 14, 2025 18:14

ரைட்டு...அடுத்த கட்சி கூட்டணியில் இனைய போகுது.


மணி
ஏப் 14, 2025 18:05

இனி பேரம் நடக்கும்


Ganesun Iyer
ஏப் 14, 2025 17:58

அதிமுக கூட்டு வேண்டாம் ஆனால் பிஜேபியுடன் உண்டு...


Rajarajan
ஏப் 14, 2025 16:52

பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி அமைஞ்சிருச்சு. அதுக்காக, பிரதமரும், உள்துறை அமைச்சரும் உங்களை தேடி வருவாங்கனு ஓவர் கனவு காணாதீங்க. நீங்க தான் வாண்டடா அவங்க வண்டில தொத்திக்கணும். உங்க மகனுக்கு அமைச்சர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி அப்படி இப்படினு பிலிம் காமிச்சீங்கன்னா, உங்க வண்டிய தனியா கழட்டிவிட்ருவாங்க. பாத்துக்கோங்க. ஏன்னா, நீங்க டெபாசிட் கூட வாங்கமாடீங்கனு எல்லாருக்குமே தெரியும்.


மணி
ஏப் 14, 2025 20:46

மிகவும் சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை