உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருக பக்தர்கள் மாநாட்டால் தி.மு.க., கூட்டணிக்கு பயம்; அ.தி.மு.க., மாஜி அமைச்சர் பேட்டி

முருக பக்தர்கள் மாநாட்டால் தி.மு.க., கூட்டணிக்கு பயம்; அ.தி.மு.க., மாஜி அமைச்சர் பேட்டி

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாதுரையை விமர்சித்து, வீடியோ ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது. மறைந்த தலைவர்களை விமர்சிக்கும வீடியோவை தவிர்த்திருக்கலாம். ஒரு நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி மட்டுமே பேசி, ஒட்டுமொத்த மாநாட்டின் நல்ல கருத்துக்களை புறக்கணிக்க முடியாது. முருக பக்தர்கள் மாநாடு, தி.மு.க., கூட்டணிக்கு பயத்தையும், பீதியையும் கொடுத்துள்ளது. தி.மு.க.,வுடன் திருமாவளவன் பெயரளவில் மட்டுமே உறவை வைத்துள்ளார்; மனதளவில் உறவை முறித்துக் கொண்டார். கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ளன. தி.மு.க., கூட்டணி முறிய அதிக வாய்ப்புள்ளது. தி.மு.க., ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அ.தி.மு.க., அணியில் இணையும் காலம் விரைவில் வரும். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கும் விஜய், அ.தி.மு.க.,வோடு கைகோர்ப்பதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.-- ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

புரொடஸ்டர்
ஜூன் 24, 2025 10:27

பயம் என்றால் என்னவென திமுகவுக்கு தெரியாது என பால் துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடிகள் செய்த நீதிமன்றம் தண்டனை தீர்ப்புக்கு காத்திருக்கும் ..ராஜேந்திர பாலாஜிக்கு தெரியவில்லை.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 13:54

பயம் என்றால் என்னவென திமுகவுக்கு தெரியாதா?


rameshkumar natarajan
ஜூன் 24, 2025 10:02

First let him win his seat, after that we can listen to him.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை