மேலும் செய்திகள்
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
6 hour(s) ago | 1
கோர விபத்து: கார்கள் மீது அரசு பஸ் மோதியதில் 9 பேர் பலி
7 hour(s) ago | 1
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
8 hour(s) ago | 2
சென்னை: தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், எந்தெந்த கட்சிக்கு எந்த தொகுதிகள் என்ற பங்கீடு நேற்று முடிந்தது. வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்; தேர்தலை சந்திக்க தயாராகி விட்டோம் என, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்ய, இறுதி கட்ட பேச்சு நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை, துணை பொதுச்செயலர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இரு கட்சிகளுடனும் தனித்தனியாக, தி.மு.க., நடத்திய பேச்சின் முடிவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தற்போது காங்கிரஸ் வசம் உள்ள தேனி, ஆரணி, திருச்சி தொகுதிகளுக்கு மாற்றாக கடலுார், திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. தேனி, ஆரணி தொகுதிகளில் தி.மு.க.வே போட்டியிடுகிறது. ம.தி.மு.க.,விடம் இருந்த ஈரோடு தொகுதியை தி.மு.க., எடுத்து கொண்டு, அதற்கு பதிலாக காங்கிரசிடம் இருந்த திருச்சி தொகுதியை கொடுத்துள்ளது. கடலுார் தொகுதியின் எம்.பி., ரமேஷ் ஒரு கொலை வழக்கில் சிக்கியதால், அவருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. அத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி எம்.பி., ஞானதிரவியம், சி.எஸ்.ஐ., பாதிரியாரை தாக்கியதாக விவகாரம் ஆனதால், அவருக்கும் இம்முறை வாய்ப்பு கொடுக்காமல், தொகுதியை காங்கிரசுக்கு மாற்றி விட்டுள்ளது அறிவாலயம். மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கத்துக்கு மீண்டும் வாய்ப்பு தராமல், காங்கிரசுக்கு கொடுத்துள்ளது. ம.தி.மு.க.,வுக்காக கேட்டு வாங்கிய திருச்சிக்கு மாற்றாக, காங்கிரசுக்கு மயிலாடுதுறை ஒதுக்கியுள்ளார் ஸ்டாலின். ஆரணி தொகுதியை ஆட்சேபம் இல்லாமல் தி.மு.க.,வுக்கு கொடுத்துள்ளது காங்கிரஸ். இதனால், டாக்டர் விஷ்ணுபிரசாத் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். கடந்த தேர்தலில், தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் வெற்றி பெற முடியாமல் போனது. எனவே, இம்முறை அதை காங்கிரசுக்கு வழங்காமல் தி.மு.க., எடுத்துக் கொண்டது.
தி.மு.க., - 21
1. தென் சென்னை2. மத்திய சென்னை3. வட சென்னை4. ஸ்ரீபெரும்புதுார்5. காஞ்சிபுரம்6. வேலுார் 7. அரக்கோணம்8. திருவண்ணாமலை9. ஆரணி10. கள்ளக்குறிச்சி11. தர்மபுரி12. கோவை13. பொள்ளாச்சி14. சேலம்15. ஈரோடு16. நீலகிரி17. தஞ்சாவூர்18. பெரம்பலுார்19. தேனி20. தென்காசி21. துாத்துக்குடிகாங்கிரஸ் - 10
1. திருவள்ளூர் -- தனி2. கடலுார்3. மயிலாடுதுறை4. சிவகங்கை5. திருநெல்வேலி6. கிருஷ்ணகிரி7. கரூர்8. விருதுநகர்9. கன்னியாகுமரி10. புதுச்சேரிவிடுதலை சிறுத்தை - 2
1. சிதம்பரம் - தனி2. விழுப்புரம் - தனிஇந்திய கம்யூ., - 2
1. நாகப்பட்டினம்2. திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூ., - 2
1. மதுரை2. திண்டுக்கல்ம.தி.மு.க., - 11. திருச்சிமுஸ்லிம் லீக் - 1
1. ராமநாதபுரம் கொ.ம.தே.க., - 1 1. நாமக்கல்
6 hour(s) ago | 1
7 hour(s) ago | 1
8 hour(s) ago | 2