உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க.,வும் புறக்கணிக்கிறது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க.,வும் புறக்கணிக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க., சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க.,வின் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க., நேற்று(ஜூன் 15) அறிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ftws8pf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தே.மு.தி.க.,வும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாததால் தொண்டர்களின் உழைப்பு, பணம், நேரத்தை விரயம் ஆக்க தே.மு.தி.க., விரும்பவில்லை. தேர்தல் என்ற ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்களின் கரங்களினால் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல் தவறாக நடத்தப்படுகிறது. இதுவரை அனைத்து இடைத்தேர்தல் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க., இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரேமலதா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூன் 16, 2024 18:41

இப்படி எல்லாக்காட்சிகளும் புறக்கணித்தால், திமுகவுக்கு இனிப்பு வழங்கியதுபோல இருக்கும்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 16, 2024 18:22

மக்கள் உங்களை புறக்கணித்து விட்டார்கள். தனித்து போட்டி இட்டு 10 சதவீத ஓட்டு வாங்குங்கள். அப்புறம் பேசுங்கள்


Bala
ஜூன் 16, 2024 16:16

விக்கிரவாண்டி தேமுதிக தொண்டர்கள் பாமாவிற்கு வாக்களிக்க வேண்டும். திமுகவிற்கு இந்த இடைத்தேர்தலில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவோம். தோல்வியை திமுகவிற்கு பரிசாக அளிப்போம்


கோவிந்தராஜ்
ஜூன் 16, 2024 14:42

சரியான முடிவு


yts
ஜூன் 16, 2024 14:13

கட்சி இன்னும் இருக்கிறதா அப்படியே நின்னுட்டாலும் ஓட்டு அப்படியே குவியும் பாருங்க


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி