உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அமைச்சரவை 5வது முறையாக மாற்றம்

தி.மு.க., அமைச்சரவை 5வது முறையாக மாற்றம்

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், ஐந்தாவது முறையாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2022ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகவும், அந்த துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டனர்அடுத்த சில மாதங்களில், உதயநிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் 2022 டிச., 14ல் பதவியேற்றார். அப்போது அமைச்சர்கள் பெரியசாமி, பெரியகருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோர் துறைகள் மாற்றப்பட்டனகடந்த ஆண்டு மே மாதம், பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது அமைச்சர்கள் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோரின் துறைகள் மாற்றப்பட்டனகடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைதானதும், அவர் வசமிருந்த மின் துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்துசாமியிடமும் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்தற்போது ஐந்தாவது முறையாக அமைச்சரவை மாற்றப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை