உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள்... உடன்பாடு

தி.மு.க.,வுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள்... உடன்பாடு

சென்னை : தி.மு.க., கூட்டணியில் உள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், லோக்சபா தேர்தலில் தலா இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.தி.மு.க., அணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் சேர மக்கள் நீதி மய்யம் கட்சியும் காத்திருக்கிறது.

ஆளுக்கு '3' டிமாண்ட்

தொகுதி பங்கீடு குறித்து, தி.மு.க., குழுவினர் இரண்டு சுற்று பேச்சை முடித்துள்ளனர். வரும் 4ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, ஒப்பந்தத்தில் கையெழுத்து பெறுமாறு, தி.மு.க., குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, நேற்று சென்னை அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை அழைத்து, தி.மு.க., குழுவினர் பேச்சு நடத்தினர். இரு கட்சிகளும் தலா மூன்று தொகுதிகள் கேட்டு விருப்பப் பட்டியல் அளித்திருந்தன.கடந்த தேர்தலை போலவே இம்முறையும் தலா இரு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என, தி.மு.க., தரப்பில் நேற்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மேல் பேச வழியில்லை என்ற நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் தி.மு.க.,வின் முடிவை ஏற்க சம்மதித்தன. உடனே ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான பின், நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:இது மிக மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற, மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதனால், கேட்ட தொகுதிகளைவிட குறைவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டோம்.மத்தியில் அமைந்துள்ள சர்வாதிகார ஆட்சியை அகற்ற, தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது, தொகுதி உடன்பாடு சுமுகமாக நடந்துள்ளது; எந்த தொகுதிகள் என்று பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும்.கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை; எந்த சிக்கலும் ஏற்படுத்த முடியாது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.

40ம் எங்களதே

பாலகிருஷ்ணன் கூறியதாவது:கூடுதல் தொகுதிகள் கேட்டோம். வேறு சில கட்சிகளும் சேர இருப்பதால், கூடுதல் தொகுதி தர வழியில்லை என தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் இணைவதற்கு தயாராக உள்ளன. மற்ற கட்சிகளுடனும் தொகுதி உடன்பாடு முடித்த பின், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டி என்பதை முடிவு செய்வோம். 40 தொகுதிகளையும் எங்கள் தொகுதிகளாகவே கருதி வெற்றிக்கு பாடுபடுவோம்.இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

தொகுதி உடன்பாடு!'

தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதியும்; இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தலா இரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை. இது குறித்து, தி.மு.க., தொகுதி பங்கீடு குழு சார்பில், அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:ஒரு வாரத்திற்குள் தொகுதி உடன்பாடு முடிந்து விடும். காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை பேச்சு நடத்த வருவர். ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக முடிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Lion Drsekar
மார் 01, 2024 18:30

உறுதியான கூட்டணிக்கு பாராட்டுக்கள் . எங்கு எந்த தவறு நடந்தாலும் எதையுமே ஒரு செய்தியாக கொள்ளாமல் , எதையுமே கண்டுகொள்ளாமல் , கண்மூடித்தனமாக ஜனநாயகம், மக்கள் வாழ்வு, அன்றாட பிரச்சனைகள், அரசு ஊழியர்கள் பிரச்னை, எதையுமே கண்டுகொள்ளாமல் இவ்வளவு ஒற்றுமையாக இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது . வாழ்க உங்கள் ஒற்றுமை, வந்தே மாதரம்


S.kausalya
மார் 01, 2024 17:10

Kolkaikkaaga எதையும் விட்டு தராத இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எப்படி ஆகி விட்டது? ஊழல், கனிம கொள்ளை,லஞ்ச லாவண்யம், தற்போது போதை பொருள் வியாபாரம் என மாநிலத்தை சீரழிக்கும் கட்சியுடன் கூட்டு என்றாகி விட்டது மிகவும் வருத்தத்துக்குரியது . ஜீவாவும், கல்யாண சுந்தரமும், அவர்களை pondrorum வளர்த்த கட்சி தற்போது தங்களின் கட்சி kolkaikku எதிரான பணக்கார கட்சியுடன் கூட்டு. எதற்க்காக ?பணத்திற்காகவும், கட்சியை uyirppiththu கொண்டு இருக்கவும் என்றால் மிகவும் கேவலம். கூட்டணி தர்மம் காரணமாக போக்குவரத்து தொழிலார்களின் அவலத்திற்கு கூட குரல் கொடுக்க முடிய வில்லை என்றால் தரம் தாழ்ந்து விட்டது என்று தானே அர்த்தம்


pv, முத்தூர்
மார் 01, 2024 16:49

கம்யூனிஸ்ட் கட்சி என்பது மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆன கட்சி என்பது தெரியும். ஆனால், கடந்த மாதம் தமிழகத்தில் பஸ் ஸ்டிரைக் ஏற்பட்டபோது உங்கள் கொள்கை பணம் மட்டுமே என்பது வெளியகிவிட்டது. தேர்தல் சீட்டுக்காக திராவிட கட்சிகளுக்கு சொம்படித்தால் விரைவில் காணாமல் போய்விடுவீர்கள்.


ராஜா
மார் 01, 2024 15:56

ஐயா மார்க்கத்தாரே நீங்கள் திமுகவுக்கு கொடுக்கும் முட்டு அவர்கள் போதை மருந்து தொழிலுக்கு மிகவும் உதவியாக இருக்கிறதாம். பாவம் தமிழ்நாடு விட்டு விடுங்கள்.


Kuppan
மார் 01, 2024 15:46

அப்படியே உண்டியல்ல எவ்வளவு விழுந்தது அதையும் செய்தியா போடுங்க, போன தடவை உண்டியலை லாரியில் வைத்து தான் கொண்டு வர முடிந்தது. 25 பைசா சில்லரை காசு உண்டியல் முழுவதும் நிரம்பி வழிந்து அதான் லாரியில் கொண்டு வந்தார்கள், இப்பொது போகும் போதே இரண்டு மூன்று லாரியை முன்னரே கொண்டு போயிருக்கலாம், இந்த முறை விலைவாசி எல்லாம் உயர்ந்து விட்டது கூட சில்லரை தேறும்.


Godyes
மார் 01, 2024 14:55

சுதந்திரம் வாங்கிய கால முதல் வலது இடது சாரி கம்யூனிஸ்டுகள் வழக்கமாக தேர்தலில் வலு உள்ளதாக கருதும் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றனர்.அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் முன்னேறியதாக தெரியவில்லை.அசெம்பிளியிலும் அவர்கள் தொகுதி மக்கள் மேம்பாட்டுக்கு குரல் கொடுத்ததாக தெரியவில்லை.


hariharan
மார் 01, 2024 14:07

அப்படின்னா மதுரையில் டூரிஸ்ட் கைட்தானா. பீட்டர் விடறதுக்கே நேரம் சரியாப்போகும்.


R.MURALIKRISHNAN
மார் 01, 2024 13:47

இவர்கள் கம்யுனிஸ்ட்டுகள் அல்ல.


இசக்கிமுத்து,தூத்துக்குடி
மார் 01, 2024 13:32

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி,காங்கிரஸ் கட்சி எந்தக் காலத்திலும் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை. ஹலோ இங்க கொஞ்சம் வாங்க நீங்கதான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதுசா வந்திருக்க தலைவரா? ஏற்கனவே நாங்க தொகுதி பங்கீட்ட டெல்லி தலைமைகிட்ட பேசி முடிச்சுட்டோம் வந்து இந்த ஒப்பந்தத்துல கையெழுத்த மட்டும் போட்டுட்டு போங்க.அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் இனிமே மீடியாகிட்ட இந்த மாதிரி பேட்டி எல்லாம் கொடுக்காதீங்க சரியா? ????


theruvasagan
மார் 01, 2024 10:19

இவங்களுக்கு மானம் என்றால் என்ன என்று தெரியாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை