மேலும் செய்திகள்
காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
1 hour(s) ago | 3
கரையை கடந்தது அக்வான் புயல்; இந்திய வானிலை மையம் அறிவிப்பு
5 hour(s) ago | 2
காலி சட்டசபை தொகுதிகள் ஆறாக அதிகரிப்பு
10 hour(s) ago | 9
திண்டுக்கல் : திண்டுக்கல், குடைபாறைப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 65, அப்பகுதியில் மீன் கடை நடத்தினார். இவரது மகன் சிவக்குமார், திண்டுக்கல் மாநகராட்சி 25வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார்.நாகராஜ் நேற்று மதியம் வீட்டிலிருந்து டூ -- வீலரில் திண்டுக்கல், பேகம்பூர் வழியாக வந்தார்.அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் டூ - வீலரில் பின் தொடர, மக்கான்பள்ளி வாசல் அருகே வந்த போது வழிமறித்து மிளகாய் பொடியை அவர் மீது துாவியது.அவர்களிடமிருந்து தப்பிக்க, ரோட்டில் நாகராஜ் ஓடினார். அவரை விரட்டி சென்ற கும்பல், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.உயிரை காப்பாற்றி கொள்ள நாகராஜ் அருகிலுள்ள கடைக்குள் ஓட, அங்கும் சென்ற கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது.முன் விரோதத்தில் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலைக்கும்பல் குறித்து பேகம்பூர் சுற்றுப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
1 hour(s) ago | 3
5 hour(s) ago | 2
10 hour(s) ago | 9