உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடையை துவம்சம் செய்த மதுரை தி.மு.க., கவுன்சிலர்கள்!

கடையை துவம்சம் செய்த மதுரை தி.மு.க., கவுன்சிலர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருமங்கலம்: மதுரை அருகே திருமங்கலத்தில் கொடுக்கல் வாங்கல் தகராறில், நகராட்சி கடை வாடகை கேட்டு பலகார கடையை தி.மு.க., கவுன்சிலர்கள் துவம்சம் செய்தனர்.திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் நகராட்சி கடையை நடத்தி வருபவர் அம்மாவாசி. இக்கடையை ஆறுமுகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் சாத்தங்குடி பாண்டியிடம், அம்மாவாசி ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில் பணம் கொடுத்தவருக்கு ஆதரவாக திருமங்கலம் நகராட்சி 1வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் காசிப்பாண்டி, 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் 'பெல்ட்' முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நவ. 6ல் கடைக்கு சென்றுள்ளனர். அம்மாவாசி குறித்து கேட்டபோது கடையை தான் நடத்துவதாக ஆறுமுகம் கூறியுள்ளார். அவரிடம் கடை வாடகையை தங்களிடம் செலுத்துமாறு கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பலகார கடை தட்டுகளை கவுன்சிலர் காசிப்பாண்டி துாக்கி வீசி சூறையாடினார். அதை கவுன்சிலர் முருகன் உள்ளிட்டோர் தடுக்க முயன்றனர். இதையடுத்து இரு தரப்பினரும் திருமங்கலம் நகர் போலீஸ் புகார் அளிக்க சென்றனர். பின்னர் சமரசம் ஆயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Parasumanna Sokkaiyer Kannan
நவ 17, 2024 04:35

There is no rule of law in Tamil Nadu because DMK is a party of roudism


Meena Meena
நவ 13, 2024 22:49

மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம்


Meena Meena
நவ 13, 2024 22:46

மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்திற்க்கு வாங்க உங்கள் கடன் பிரச்சனைக்கு சட்டரீதியான உடனடி தீர்வு தலைமையகம் திருப்பூர் மாவட்டம்.


R S BALA
நவ 12, 2024 21:32

இந்த பலகாரத்தை செஞ்ச மனுஷன் பின்னாடி சோகமா நிற்கிறார் பார்க்க பாவமா இருக்கு..


M Ramachandran
நவ 12, 2024 19:48

பிரியானா ண்டாவைய்ய தானெ தூக்கு வார்கள். அது என்ன மளிகை கடையில் கைவைக்கிறது


D.Ambujavalli
நவ 12, 2024 17:27

கழகக் கண்மணிகள் விளையாட்டை ரசித்து மகிழ, முதல்வர் விருதுநகரிலிருந்து ஒரு நடை அப்படியே திருமங்கலம் வரலாமே


கத்தரிக்காய் வியாபாரி
நவ 12, 2024 14:13

த்ராவிடம்டா மாடெல்டா


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 12, 2024 13:09

அனைத்து ஊர்களிலும் பஸ் ஸ்டாண்டில் கடையை நடத்துவதில் ஏதாவது தில்லுமுல்லு கண்டிப்பாக இருக்கும். உள்ளூர் அமைப்புக்களிடமிருந்து மிகக் குறைந்த வாடகைக்கு ஏலம் எடுத்து அதை அதிக உள் வாடகைக்கு விடுவது என்பது சர்வ சாதாரணம். அதிலும் உணவுப் பொருட்கள் விற்கும் அங்காடிகள் உணவின் தூய்மை தன்மை சந்தேகம் தான். அனைத்து கடைகளிலும் தரம் குறைந்த பொருட்கள் விற்பனை. குடி நீர் குளிர்பானங்கள் காலக்கெடு முடிந்தவை தேதி மாற்றி விற்பனை எல்லாம் சர்வசாதாரணம். அதேபோல் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் கண்டிப்பாக நடத்துபவர் பெயரில் இருக்காது வேறு யாராவது பெயரில் தான் இருக்கும். உள்ளூர் கவுன்சிலர்கள் இதில் அதிகமாக ஈடுபட்டு இருப்பார்கள். அதே போல் டாய்லெட். நாம் சாதாரணமாக நினைக்கும் பே அண்ட் யூஸ் டாய்லெட் ஒரு பணம் கொழிக்கும் கற்பக விருட்சம். இரயில் நிலையங்கள் கதியும் இதே தான். ஆனால் இதில் அனைத்து திராவிட கட்சிகளும் பயங்கர ஒற்றுமை. இவைகள் அனைத்தும் அரசியல் வாதிகள் தான் நடத்துகிறார்கள். மந்திரி முதல் உள்ளூர் கவுன்சிலர் வரை கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் வாதிகளும் ஒற்றுமையுடன் செய்யும் வியாபாரம் பஸ் ஸ்டாண்ட் கடைகள் இரயில் நிலையம் கடைகள் இருசக்கர வாகன நிறுத்துமிடம் பே அண்ட் யூஸ் டாய்லெட் மாநகராட்சி நகராட்சி ஊராட்சி உள்ள வணிக வளாகங்கள். வாழ்க தமிழகம்.


sankaranarayanan
நவ 12, 2024 12:58

விருதுநகர் சென்ற முதல்வர் அருகிலேயே திருமங்கலத்தில் அவரது கட்சி கவுன்சிலர் பிரமுகர் செய்த அட்டகாசத்தை அடாவடியை கேட்டறிருந்தாரா மாட்டாரே இதுதானய்யா திராவிட ஆட்சி


Parthasarathy Badrinarayanan
நவ 12, 2024 12:28

கிரிமினல்களுக்கு வாக்களித்தால் இப்படித்தானா?


சமீபத்திய செய்தி