உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் ஓட்டுகளை கவர தி.மு.க., முடிவு டாஸ்மாக் கடைக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை?

பெண்கள் ஓட்டுகளை கவர தி.மு.க., முடிவு டாஸ்மாக் கடைக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை?

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெண்களின் ஓட்டுகளை கவர, 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு மாதத்தின் முதல் நாளன்று விடுமுறை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 மதுபான விற்பனை கடைகளை நடத்துகிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும் இந்த கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உட்பட, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w89lffos&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தினமும் சராசரியாக 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை நாட்களில் அதிகமாகவும் மது வகைகள் விற்பனையாகின்றன. தனியார் நிறுவன பணியாளர்களுக்கு, மாதத்தின் முதல் நாளில் சம்பளம் வழங்கப்படுகின்றன. சம்பளத்தை முழுதுமாக பணியாளர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் நோக்கில், கேரளாவில் மாதத்தின் முதல் நாளன்று, அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை, தமிழகத்திலும் அமல்படுத்துமாறு, 'டாஸ்மாக்' கடை பணியாளர்கள், அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மதுவிலக்கை அமல்படுத்துமாறு, தி.மு.க., கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. பெண்கள் ஓட்டுகளை கவர, மது கடைகளுக்கு மாதத்தின் முதல் நாள் விடுமுறை அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, வரும் சுதந்திர தினத்தில், முதல்வர் ஸ்டாலின் உரையில் வெளியாகவும் வாய்ப்புள்ளது. பெண்கள் வரவேற்பு கிடைக்கும்! மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அண்டை மாநிலங்களில் மது விற்கப்படுவதால், தமிழகத்தில் மதுவிலக்கிற்கு சாத்தியம் இல்லை. படிப்படியாக மது விற்பனை நேரத்தை இரண்டு மணி நேரம் குறைப்பது, 500 மது கடைகளை மூடுவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின், மாதத்தின் முதல் நாளன்று, மது கடைகளுக்கு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்தினால், பெண்களிடம் வரவேற்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Mohanakrishnan
ஆக 09, 2025 06:07

முட்டாள்களின் ராஜ்ஜியம் என்று நிரூபணம் ஆகி உள்ளது. ஏதோ முதல் தேதியில் மட்டும் சரக்கு அடிக்கிறார்கள் என்ற நினைப்பு


Dv Nanru
ஆக 08, 2025 23:29

இந்த தடவை திமுக கூட்டணி டப்பா டான்ஸ் அடிவிடும் கரணம் போனே சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதி எதுவுமே நிறைவேற்ற வில்லை அதுவும் பெண்களுக்கு மதம் தோறும் ஆயிரம் ரூபாய் என்று சொல்லிவிட்டு ஆட்சியை பிடித்த அனைத்து பெண்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டு பிறகு தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் தான் ஆயிரம் ரூபாய் என்று சொன்னது அனைத்து பேபிகளுக்கும் ஞாபகம் இருக்கும் அப்பறம் எப்படி பெண்கள் ஓட்டுபோடுவார்கள் சொல்லுங்க அன்னே சொல்லுங்க ...


M S RAGHUNATHAN
ஆக 08, 2025 19:40

பொதுவாக ஒரு கம்பெனியில் முதல் தேதி அன்று administrative employees, officer cadre ஆகியோருக்கு தான் சம்பளம் போடுவார்கள். தொழிலாளிகளுக்கு 7 ஆம் தேதி போடுவார்கள். Overtime, incentive 10 ஆம் தேதி போடுவார்கள். கட்டுமானம் நடக்கும் இடங்களில் சனிக்கிழமை பணப்பட்டுவாடா நடக்கும். ஆகவே சனிக்கிழமை மற்றும் 7 மற்றும் 10 ஆகிய தினங்களில் மதுக் கடைகளை மூடலாம்.


Karthik
ஆக 08, 2025 18:38

ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 - இந்த இரண்டு தினமுமே மது விற்பனை படு ஜோராக நடக்கிறது - பாதி ஷட்டர் திறந்து வைத்து


ஈசன்
ஆக 08, 2025 18:27

மாத கடைசியில் மது விற்பனை ஒன்றரை மடங்குக்கு மேல் இருக்கும். ஒன்றாம் தேதி டாஸ்மாக் தவிர மற்ற டீ கடை, தள்ளு வண்டிகள் போன்றவை மூலம் இரு மடங்கு லாபத்திற்கு விற்பனை. இரு மடங்கிற்கு சரக்கு வாங்க கையில் காசு இல்லாதவர்கள் பட்டினிதான். மறுநாள் தாகத்தை தீர்க்க கடையை நோக்கி படையெடுப்பார்கள். அன்றும் சராசரியை விட கூடுதல் விற்பனை. நல்ல பெயருக்கு நல்ல பெயர். நஷ்டம் ஏற்படாத வகையில் விற்பனை. பேஷ் பேஷ்.


Sivagiri
ஆக 08, 2025 18:11

கருணாநிதி - தீயமுக - ரெண்டுமே ஆரம்பிச்ச நாலில் இருந்து , தமிழ்நாட்டு பெண்கள் ஓட்டுப் பிட மாட்டாங்க - கருணாநிதி - தீமுகா அப்டின்னாலே , கொலை கொள்ளை கற்பழிப்பு , சங்கிலி பறிப்பு , ரௌடிசம் , கள்ள சாராயம் , கஞ்சா , விலைவாசி உயர்வு , அரிசி பஞ்சம் , பட்டினி , தெருவில் பெண்கள் நடமாட முடியாது , இதெல்லாமே அப்போ இருந்தே தீமுகாவின் ட்ரெட்மார்க் - - எம்ஜிஆர் வந்தவுடனே போட்ட முதல் உத்தரவு - ரோட்டில் எவனாவது லுங்கியை தூக்கி கட்டி இருந்தால் லத்தியாலேயே சாத்தி , டயரை பஞ்சராக்கி விட வேண்டும் - - இப்போ , நாட்டு நடப்பதை பார்த்தால் - அய்யாவே தேவலை போல - - ஆனா இப்போ ஓட்டு கேட்கப் போகணுமே , பழசெல்லாம் பெண்களை மறக்கடிக்க செய்யணுமே , , , அதான் காசு கொடுப்பாரு , அது இதுன்னு டெய்லி ஒரு புருடா விட்டு , டிவி மீடியாக்களில் மட்டும் , நாளெல்லாம் திரும்ப திரும்ப போட்டு , பெண்கள் ஓட்டை இழுத்திரலாம்னு பாக்கிறாய்ங்க , , , , ஆனா இப்போ அது கொஞ்சம் கஷ்டமான வேலைதான் , ஆப்போசிட் பார்ட்டி எவ்வளவு வீக்கா இருக்கோ அவ்வளவு இவிங்களுக்கு நல்லது . . .


அரவழகன்
ஆக 08, 2025 17:36

எரித்த கணவன் உயிர் பெற்று வருவானா.. என்ன..


v s perumal
ஆக 08, 2025 17:11

விடுமுறை நாளன்று. அதாவது எந்த நாளைக்கெல்லாம் மதுக்கடைகள் அரசுவிற்பனை செய்வதில்லையோ. அதே நாளில் தங்கு தடை இல்லாமல் பயமின்றி இரண்டு மடங்கு உயர்த்தப்பட்ட விலையில் மது பாட்டில்கள் தங்கு தடை இன்றி விற்பனை செய்கிறது. இதன் மீது எந்த நடவடிக்கையும் அதிகாரிகளோ. காவல் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.ஏனென்றால் அது அப்படிதான். எந்த கட்டுப்பாட்டின்றியும் மது விற்பனை பல மடங்கு நடக்கும். இதுதான் உண்மை


Raja
ஆக 08, 2025 17:04

என்ன ஒரு புத்திசாலித்தனம் சிரிப்புதான் வருது. குடிமகன்கள் முதல் நாளே வேண்டிய அளவுக்கு சரக்கை வாங்கி விடுவார்கள்...


அருண் பிரகாஷ் மதுரை
ஆக 08, 2025 15:13

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் 10000 ரூபாய் அபராதம் விதிக்கும் அரசு எதற்காக மதுவை விற்பனை செய்ய வேண்டும்..பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியுமா???. விடுமுறை விடுவதால் எந்த பயனும் இல்லை.. புகைப்பழக்கம் போல மதுவும் தினசரி பழக்கம் ஆகிவிட்டது.. இதில் ஒரு நாள் விடுமுறை விடுவதால் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக இருக்கும்..