உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மா.செ.க்கள் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மா.செ.க்கள் கூட்டம்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை(செப்.9) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பற்றிய அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டு உள்ளார். இந்த கூட்டம் நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.திமுக முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என்று துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பி இருக்கிறார். வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது இங்கு கட்சியினர் ஆற்றிய பணிகள், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasan
செப் 08, 2025 20:36

This meeting could have been conducted in Oxford UK or Germany. Party men would have been happier.


சாமானியன்
செப் 08, 2025 13:27

திராவிட கட்சிகள் கட்சித்தலைவரே முதல்வராக இருக்கனும் என்று நினைக்கின்றன. கருணாநிதி, எம்.ஜி.ஆர், அம்மா, பழனிசாமி, "பன்னீர், ஸ்டாலின் ஆகியவர்கள் அப்படித்தான் பயப்படுகிறார்கள். பாஜக அப்படியில்லை.


முக்கிய வீடியோ