உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., நாடகம்

டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., நாடகம்

''டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் சரியான நேரத்தில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்காமல் வாய்மூடி இருந்துவிட்டு தி.மு.க., அரசு தற்போது நாடகமாடுகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.

டில்லியில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தின் மதுரை மாவட்டம் மேலுாரில் உள்ள அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில், கனிம சுரங்கம் தோண்ட மத்திய அரசு முறைப்படியான அனுமதி அளித்தது. இதன் காரணமாக, 10 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்; 2,200 ஆண்டுகள் பழமையான கற்கோவில்கள், சமணர் படுகைகள் அழிக்கப்படும் என்று அங்கிருக்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்கள் பாதிக்கும்படியான எந்த விஷயத்தையும் மத்திய அரசு செய்யாது என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்துப் பேசி, மக்களுக்கான பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறினேன். திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மறு பரிசீலனை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. பரிசீலிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். மக்களின் நலனை கருத்தில் வைத்து, இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும்.தமிழக அரசு தொடர்ந்து இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. முதலில் திட்டம் வருவதற்கு காரணமாக இருந்து விட்டு, இப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றதும், தமிழக சட்டசபையில் சுரங்கம் அமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக, 2023, செப்., 15ல் தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. இந்தாண்டு பிப்., 8ல் தமிழக அரசு விரிவான உள்ளீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. இதன் அடிப்படையில்தான், மத்திய அரசு ஏலம் அறிவித்தது. இந்த விபரங்களை மறைத்து, தங்களுக்கு எதுவுமே தெரியாது என்பதை போல தி.மு.க., அரசு தொடர்ந்து நாடகமாடுகிறது.கடந்த ஓராண்டாக இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஏலம் அளித்த பின் அதை அரசியல் ஆக்குவது ஏன்?இவ்வாறு அண்ணாமலை கூறினார். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Jay
டிச 14, 2024 18:12

ஹைட்ரோகார்பன் திட்டம், ஸ்டெர்லைட் காப்பர், நீட் தேர்வு, ஜிஎஸ்டி, ஜல்லிக்கட்டு தடை என பல திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு பிறகு அதை எதிர்த்து நாடக அரசியல் நடத்தப்பட்டது. அந்த வகையில் இந்த டங்க்ஸ்டன் திட்டத்தையும் சேர்த்து கொள்ளலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு , மக்கள் நலன், நாட்டு நலன், பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு என பல விஷயங்கள் உள்ளன.


veeramani
டிச 14, 2024 09:29

ட ங்ஸ்டன் உலோகம் ஒரு முக்கியமான உலோகம். இந்தியாவில் நமது மதுரை ஏரியாவில் மட்டும்தான் உள்ளது. மத்திய அரசு கண்டுபிடுத்து தமிழக அரசிற்கு விளக்கம் கேட்ட பின்னர் டெண்டர் வரை வைத்துள்ளது. தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது . சீனாவை நம்பி எந்த காரியமும் செய்யஇயலாது . முதுகில் குத்துவதில் திறமைசாலி. எனவே சமண கோவில்கள், சுற்றுசூழல் பாதிப்பு இல்லாமல் டங்ஸ்டன் எடுக்க அனுமதிக்கொடுத்தால் மதுரை மக்களுக்கு வேலையும் மற்றைய வசதிகளும் கிட்டும்


புதிய வீடியோ