உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஸ்டாலின் மற்றும் பழனிசாமியுடன் தே.மு.தி.க., நிர்வாகிகள் சந்திப்பு

 ஸ்டாலின் மற்றும் பழனிசாமியுடன் தே.மு.தி.க., நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை, டிச. 26-- முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரை, தே.மு.தி.க., நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர், நேற்று சந்தித்து பேசினர். தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் நினைவு தினம், வரும் 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை கோயம்பேடில் உள்ள, அவரது நினைவிடத்தில், தே.மு.தி.க., சார்பில், குரு பூஜை நிகழ்வுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரை, அவர்களின் இல்லத்தில், நேற்று தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், துணைப் பொதுச்செயலர் பார்த்தசாரதி ஆகியோர் சந்தித்து, அழைப்பு விடுத்தனர். இது குறித்து பேட்டி அளித்த சுதீஷ், “விஜயகாந்த் நினைவு தின நிகழ்வில் பங்கேற்குமாறு அழைக்கவே, முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி, ஆகியோரை சந்தித்தோம். அரசியல் எதுவும் பேசவில்லை,'' என்றார். வரும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுடனும் தே.மு.தி.க., பேசி வருவதாக கூறப்படும் நிலையில், இரு கட்சி தலைவர்களையும், தே.மு.தி.க., நிர்வாகிகள் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Baskar
டிச 27, 2025 00:23

இதெல்லாம் ரஹஸ்யம் , வெளியிலே சொல்ல கூடாது . மும்முனை பேச்சாகவும் இருக்கலாம் ?


Venkat
டிச 26, 2025 17:10

எந்த கட்சி பெரிய பொட்டி கொடுக்கும்னு இப்போவே வேவு பாக்குறாங்க போல


V RAMASWAMY
டிச 26, 2025 14:34

கடுமையான நிலைப்பாட்டை தளர்த்தி பேச்சு வார்த்தை நடத்துங்கள், தற்சமயம் பந்து உங்கள் கோர்ட்டில் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை