உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் குற்றச்சாட்டு: செய்தியாளரிடம் டிஆர் பாலு கோபம்

அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் குற்றச்சாட்டு: செய்தியாளரிடம் டிஆர் பாலு கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விகளால் திமுக பொருளாளர் டிஆர் பாலு கோபம் அடைந்தார். ஒரு கட்டத்தில் 'பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்றார்.2023ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி அப்போது தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று அவர் ஆஜரானார். இதன் பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qob8q9tm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிருபர் : 2004ம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009 ல் உங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். அப்போது போகாத மானம், இப்போது வெளியிட்ட திமுக பைல்ஸ் மூலம் டிஆர் பாலுவுக்கு மானம் போய்விட்டதா எனக்கூறியுள்ளார்.பாலு: உங்களை அந்த மாதிரி கேட்க சொன்னாரா?நிருபர்:பேட்டியே கொடுத்துள்ளார்.பாலு: பேட்டி கொடுத்திருக்காரா? சரி அதற்கு பதில் சொல்கிறேன். சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன். நீங்கள் கேட்கலைல இது?நிருபர்: அண்ணாமலை சொன்னதை தான் கேட்கிறேன்பாலு: எந்த இடியட் சொன்னாலும், நீங்கள் கேட்கலைல?நிருபர் : நான் கேட்கல அண்ணாமலை கூறியதை தான் கேட்கிறேன்.பாலு: அண்ணாமலை சொல்லும் போது என்னிடம் சொல்வார். நான் பதில் சொல்கிறேன்தொடர்ந்து, ரூ.10 ஆயிரம் கோடி குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Venktachalam
ஆக 29, 2025 09:57

கருப்பு பணம்தான் ஊழலுக்கு விதை. இதை ஒழிக்க வேண்டுமானால் தற்போது நடைமுறையில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக வேறு ஒரு பெயரில் புதிய பணத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும். இந்த புதிய பண நோட்டுக்கு "தேஷ்" தேசம் என்று பெயரிடலாம். வங்கிக் கணக்குகள் மூலமாக ரூபாய்க்கு பதில் புதிய பணத்தை எந்த வருமான வரி தடையும் இல்லாமல் பெற்றுக் கொள்ள வழி முறைகள் வகுக்க வேண்டும். இந்த ஒரு வழியாகத்தான் கருப்பு பண கோடீஸ்வரர்களை அடையாளம் காண முடியும்.


oviya vijay
ஆக 29, 2025 08:51

I'm தி யூனியன் மினிஸ்டர். ஓபன் தி டூர் அப்டின்னு உதார் விட்டவர். அய்யோ kolraangappa...ரிப்பீட்


metturaan
ஆக 29, 2025 08:06

குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்... கழகத்தவரிடம் வேறு என்ன பதில் எதிர்பார்க்க முடியும்?


Padmasridharan
ஆக 29, 2025 06:30

அரசியல்லயும் காவலர்கள் துறையிலும் இந்த மாதிரி மற்றவர்களிடத்தில் மரியாதை இல்லாமல் பேசுவதால்தான் வோட்டு போட்டு வாழும் நல்ல மக்களுக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது சாமி.


நிக்கோல்தாம்சன்
ஆக 29, 2025 04:38

பரவா இல்லையே தமிழகத்தில் ஒரு சில ஆன் நிருபர்களும் உள்ளனரா


ManiMurugan Murugan
ஆக 28, 2025 23:25

உண்மை வெளிவருகிறது என்ற பயம்


Whistle Blower
ஆக 28, 2025 22:51

வயதாகிறதே தவிர அதற்கான முதிர்ச்சி இல்லாதவர்.


Modisha
ஆக 28, 2025 20:52

பாலு பேரனை பாராட்டுகிறேன். நேர்மையான அண்ணாமலை தனக்கு பதக்கம் கொடுத்தால் அதை வாங்கும் தகுதி சாராய, ஊழல் பண ரத்தம் ஓடும் தனக்கு இல்லை என்ற தன்னடக்கம் பாராட்டுக்குரியது .


Ganapathy
ஆக 28, 2025 20:10

எப்படி..."லக்ஷ்மி சரஸ்வதி பார்வதி மூணு சாமி கோவிலையும் நான்தான் என்கையால இடிச்சேன்"....இந்த திமுருக்கு சரியான பதிலடி உனக்கு இருக்கு பாலு...


Krishnamurthy Venkatesan
ஆக 28, 2025 19:53

ஓகே. ஓகே. வாசகர்கள், உங்கள் கோபத்தை மீண்டும் அவரை வெற்றி பெற செய்து காட்டுவீர்கள் என நம்புவோமாக.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை