உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிமவள கொள்ளையின் காட்பாதர் குடும்பத்துக்கு பதவிகளை தி.மு.க., வாரி வழங்குகிறது

கனிமவள கொள்ளையின் காட்பாதர் குடும்பத்துக்கு பதவிகளை தி.மு.க., வாரி வழங்குகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கனிமவளக் கொள்ளையின், 'காட்பாதர்' மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, பதவிகளை வாரி வழங்கி, அவர்களை தி.மு.க., ஊக்குவிக்கிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார். அவரது அறிக்கை: சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் கனிமவளக் கொள்ளைகளை தடுக்க, தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், 'கனிமவளக் கொள்ளையைக் கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' என நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு, 1,439 கனிமவளக் குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 135 வழக்குகளில், எத்தனை சட்டவிரோத குவாரிகள் சேர்க்கப்பட்டன என்ற விபரமோ, எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது என்ற விபரமோ, அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இல்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 'ஒரு குவாரியில் 5 கோடி ரூபாய் அளவுக்கு கனிமவளத்தை கொள்ளையடிக்கும்போது, அதற்கு காரணமானவர்களுக்கு வெறும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது' எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், அரசியல் மற்றும் பண பலத்தை வைத்து, 'மாபியா' போல கனிமவளக் கொள்ளை கும்பல்கள் செயல்படுவதாகவும் நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர். இது முற்றிலும் சரியானது. தென் மாவட்டங்களில் மட்டும், தி.மு.க., ஆட்சியில், குறைந்தது 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கனிமவளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. யாரும் தண்டிக்கப்படவில்லை; கொள்ளையடிக்கப்பட்ட கனிமவளங்களுக்கான இழப்பீடும் பெறவில்லை. அனைத்துக்கும் மேலாக, தென் மாவட்ட கனிமவள கொள்ளைக்கு, 'காட்பாதர்' ஆக இருப்பவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் அரசிலும், அரசியலிலும் பதவிகளை வாரி வழங்கி, தி.மு.க., ஊக்குவிக்கிறது. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kumaran
டிச 20, 2025 14:00

கனிமவள கொள்ளை பற்றி சார் நீங்களும் திரு அண்ணாமலை அவர்களுமே தொடர்ந்து குறல் கொடுத்து வருகிறீர்கள் மலைகள் கறைந்து திட்டாக மாறுகிறது முன்னைவிட அதிகமாக இப்போது கேரளாவிற்கு கடத்தப்படுகிறது இதை யார் எப்படி நிறுத்துவது என தெரியவில்லை


sankar
டிச 20, 2025 10:55

சார் - கொள்ளை அடிப்பதே அவர்கள் கொள்கை


kjpkh
டிச 20, 2025 09:28

கனிமம் கொள்ளை போவது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.


T.sthivinayagam
டிச 20, 2025 09:05

கடந்த பத்து ஆண்டுகளில் கனிமவள காட்பாதர் யார் என்று மக்களுக்கு தெரியும்.ஆமாம் உங்கள் மெடிக்கல் காலேஜ் ஊழல் வழக்கு என்னவாயிற்று என்று மக்கள் கேட்கிறார்கள்.


Field Marshal
டிச 20, 2025 08:00

அப்பா மகன் சண்டை போட்டால் இப்படி தான் நடக்கும்


vaiko
டிச 20, 2025 07:48

அது சரி நம் சம்பத்தை பட்ட இந்தூர் மருத்துவ கல்லூரி விவகாரத்தை உடனே விசாரிக்க வேண்டும் என மருத்துவர் ஐயா கோரிக்கை விடுத்தது இருக்கின்றார் . அது பற்றி பேசுங்கள் சொன்ன ஐயா .


இரா. பாலா
டிச 20, 2025 05:27

Why not you?


Kasimani Baskaran
டிச 20, 2025 05:17

ஆதாரங்கள் பொது வெளியில் கொட்டிக்கிடக்கும் பொழுது ஒருவருக்கு கூட நீதிமன்றம் செல்ல துப்பில்லையா அல்லது நீதிமன்றத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாதா


முக்கிய வீடியோ