உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்களின் உணர்வை மதிக்காத தி.மு.க., அரசு

ஹிந்துக்களின் உணர்வை மதிக்காத தி.மு.க., அரசு

சிறுபான்மையினர் ஓட்டுக்கு ஆசைப்பட்டு நீதிபதியின் 2 தீர்ப்புகளையும் அவமதித்து ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளது தி.மு.க. அரசு. தீபத்துாணில் தீபம் ஏற்ற அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதும் முதலில் 'கலவரம் ஏற்படும்' என்று பொய் கதை விட்டார் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. வெங்கடேசன். கூடவே காங்கிரசும் தங்களது சிறுபான்மையின ஓட்டு வங்கிக்கு பாதிப்பு வராதவாறு, ஹிந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்றது. இதனால் கூட்டணி நிர்ப்பந்தம், தங்களுக்கான சிறுபான்மையினர் ஓட்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீபம் ஏற்றாமல் பின்வாங்கியது தி.மு.க. அரசு. 'தேர்தல் அரசியலுக்கு' முன்பு நீதிமன்றம் அவமதிப்பு தி.மு.க.வுக்கு பெரிதாக தோன்றவில்லை. அடுத்து மனுதாரரே தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்ட உடனே, அதனையும் ஏற்காமல், கலெக்டர் வழியாக 144 தடை உத்தரவு பிறப்பித்து, 2வது நீதிமன்ற அவமதிப்பையும் ஏற்றுக் கொண்டது. பொதுவாக தி.மு.க. அரசு ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிக்காது என்ற கருத்து உண்டு. அதனை உறுதிப்படுத்துவது போல, தர்ஹா நிர்வாகமே இந்த வழக்கில் எதிர்ப்பு தெரிவிக்காத போது, வரும் தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க., அரசு பிடிவாதமாக ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுகிறது. மதுரை போன்ற ஆன்மிக மண்ணில், இது தி.மு.க.,வுக்கு வரும் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மதநல்லிணக்கம் நிலவும் மதுரையில் தி.மு.க., அரசு தான் தேவையில்லாமல் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் ஹிந்து அமைப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி