உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர் கல்வி துறையை சீரழிக்கும் தி.மு.க., அரசு

உயர் கல்வி துறையை சீரழிக்கும் தி.மு.க., அரசு

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகள், ஜூலையில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், திட்டமிட்டபடி அந்தத் தேர்வுகள் நடக்காது என்பது உறுதியாகியுள்ளது. இதனால், ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்காத உதவாத அரசு என்ற சிறுமையை, தி.மு.க., அரசு பெற்றுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடக்காததால், அந்த வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவர். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் தரமான கல்வி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின், தி.மு.க., ஆட்சியில்தான் தமிழகத்தின் உயர் கல்வி துறை மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளது. - அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 30, 2025 06:47

தி.மு.க., ஆட்சியில்தான் தமிழகத்தின் உயர் கல்வி துறை மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளது..இல்லாவிட்டால் பிஜேபி உள்ளெ நுழைந்துவிடும் ..மதவாதம் தலைதூக்கும் ..உயர்கல்வியை தமிழ் நாட்டில் தான் கற்க வேண்டுமா அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பிய நாடுகளில்,ஆபிரிக்க ,ரஷ்யா போன்ற நாடுகளில் ஏழை மாணவர்கள் சென்று படிக்கலாமே ...நீட் தேர்வே தேவையில்லை என்கிறோம் .இதில் ஆசிரியர்களுக்கு வேறு தேர்வா ? அடுத்தமுறை ஆட்சிக்கு வரும்போது ...தமிழ்நாட்டில் பள்ளிகளில் தேர்வு முறையே இருக்காது ...துணை முதல்வர்போல் படிக்காமலேயே பதவிக்கு வரலாம்


சமீபத்திய செய்தி