மேலும் செய்திகள்
தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
6 hour(s) ago | 14
நவம்பர் 17ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
6 hour(s) ago | 1
சென்னை: காவிரியில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு கைகழுவியது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: மேகதாது அணை வழக்கில் தமிழக அரசின் வாதம் முதிர்ச்சியற்றது என விமர்சித்து, கர்நாடக அரசை அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.தமிழக விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றவல்ல முக்கிய வழக்கில், முறையான, வலுவான வாதங்களைத் திமுக அரசு முன்வைக்காததே இன்றைய தீர்ப்புக்கான மூலக்காரணம் என்பது திண்ணம்.இப்படி தங்களது திறனற்ற நிர்வாகத்தினாலும், கர்நாடக காங்கிரஸ் அரசுடனான கள்ளக்கூட்டணியின் காரணமாகவும், தமிழக விவசாயிகளின் அடிவயிற்றில் கனலை மூட்டும் இத்தீர்ப்புக்கு வழிவகுத்த திமுக அரசைத் தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது.காவிரியில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு கைகழுவியது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
6 hour(s) ago | 14
6 hour(s) ago | 1