உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்; நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்; நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் சிறார்கள் திரிவதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மீது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதை “ரீல்ஸ்” ஆகப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது.புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்வதைப் பார்க்கையில் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் பயமாகவும் உள்ளது.சக மனிதரை ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூக வலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது.பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தை தான் தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்திற்கும் கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டப்படும், தமிழகம் மீட்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R.MURALIKRISHNAN
டிச 29, 2025 17:52

அடித்து விரட்டப்பட வேண்டிய ஆட்சி. இனியும் 3 மாதம் மட்டுமே இந்த கள்ள களவாணிகளின் ஆட்டம். நல்லவர்களை தேர்ந்தெடுப்போம். திராவிஷ் கும்பலை வேரறுப்போம்


MARUTHU PANDIAR
டிச 29, 2025 21:18

பாவம் .ரொம்பத் தான் ஆசை ..திராவிஷ அரசியலை ஓரு வழி பண்ண வேண்டிய அண்ணாமலையை ஓரம் கட்டி, இன்னும் ஒரு 20 ஆண்டுகள் கேரண்டியாய் தமிழகத்தை கோபால புரம் கையில் ஒப்படைச்சுட்டாரே. புலம்பி பயனில்லை.


MARUTHU PANDIAR
டிச 29, 2025 17:49

நாங்க பலதலைமுறையா இன்ன கட்சிங் க. எங்க தலைமுறையே இன்ன கட்சிக்கு தான் ஓட்டுப் போடும் தலைமுறை தெரியும்ல .


Svs Yaadum oore
டிச 29, 2025 17:05

சக மனிதரை ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. ....ஆனால் வடக்கன் என்று இழிவாக பேசி வன்முறையை தூண்டும் மதம் மாற்றும் கும்பலுக்கு இது புரியாது..புரிந்தாலும் மத வெறியில் அழிந்து போகட்டும் என்றுதான் நினைக்கும் ..விடியலுக்கு வோட்டு போட்டு தானாகவே அழிவை தேடியும் மக்களுக்கும் இது புரியாது ....


Sundarapandiyan
டிச 29, 2025 16:24

அறிக்கை அறிக்கை மேலே அறிக்கை மட்டும்தான்விட தெரியும போல...


venkat
டிச 29, 2025 19:22

இது என்ன கருத்து... பிறகு என்ன செய்ய முடியும்.. ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆட்கள் தானே நடவடிக்கை எடுக்க முடியும்.. போதை வஸ்துகள் தமிழகத்தில் அதிக அளவிலான புழக்கம் எப்படி?? இந்த சிந்தனை கூட வரல என்றால் கஷடம்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை