உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., நேர்மையான போர் வீரன் அல்ல: தமிழிசை

தி.மு.க., நேர்மையான போர் வீரன் அல்ல: தமிழிசை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, 'தி.மு.க., நேர்மையான போர் வீரன் அல்ல' என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h1aomye4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், தமிழிசை கூறியதாவது: கவர்னரும், முதல்வரும், தங்களது கருத்து வேறுப்பாட்டை விட்டு, அமர்ந்து ஒற்றுமையாக, தோழமையுடன் பேசி துணை வேந்தர்கள் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என நான் நினைத்து கொள்கிறேன்.சீமானின் ஈ.வெ.ரா பற்றிய கருத்துக்கள் எல்லாம் பா.ஜ.,வின் கருத்துக்கள். காலம் காலமாக பா.ஜ., சொல்லி வந்த கருத்து தான். ஆகையால் எங்களது கருத்தியலை சீமான் பேச ஆரம்பித்து இருக்கிறார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆகையால் இனிமேல் ஈ.வெ.ரா.,வை பற்றிய பிம்பம் ஒவ்வொன்றாக உடைய ஆரம்பிக்கும் எனது கருத்து. பா.ஜ.,வின் பி டீம் எல்லாம் சீமான் கிடையாது. எங்களது 'தீம்'. எங்களது 'தீம்' ஐ அவர் பேசுகிறார். அவ்வளவு தான். அனைவருக்கும் தனி தனி கொள்கை இருக்கிறது. ஆரோக்கியமான கருத்தை அவர் பதிவு செய்கிறார். உண்மை என்றாவது வெளிவரும். அண்ணாதுரை வளர்த்த தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ். ஈ.வெ.ரா வளர்த்த தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்த தமிழ். ஈ.வெ.ரா., குறித்து சீமான் கேட்டு இருப்பது நல்ல கேள்வி. இவ்வாறு தமிழிசை கூறினார்.

தி.மு.க., போர் வீரன் அல்ல

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, தமிழிசை அளித்த பதில்: பா.ஜ.,வின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி தி.மு.க.வுக்கு இல்லை. போர்க்களத்தில் தி.மு.க., நேர்மையான போர்வீரன் அல்ல. முதுகில் குத்துபவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

முருகன்
ஜன 14, 2025 09:23

போருக்கு முன்பே புறமுதுகிட்டு ஓடுவது சாரியா


T.sthivinayagam
ஜன 13, 2025 16:43

நேர்மையான போர் ஹிந்து மஹாகதைகளிடமும் இல்லை பிரபஞ்ச சூச்ஷும்ம் தெரியாத பாஜாகா தலைவரா


இவன்
ஜன 13, 2025 16:06

கொத்தடிமைஸ் வோட் வாங்குனது லாம் தெரியுத மாதிரி யே பேசுவானுங்க உபிஸ்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 14:30

அதென்னவோ தெரியல, பாஜக வில் எல்லோருமே அறிவிலிகளாகி விடுகிறார்கள். போட்டியிட்ட 23 MP தொகுதிகளிலும் பாஜக வைத் தோற்கடித்தது மறந்து விட்டதா? இதில் 10 தொகுதிகளில் டெபாசிட் டே இழந்ததும் மறந்து விட்டதா? திமுக அணி என்றாலே பாஜக அணி தெறித்து ஓடுகிறது. இப்போது அதிமுக அணியும் ஓடுகிறது. 1 மாநிலம், 1 UT யின் கவர்னரா இருந்தும், அவர்களின் சட்ட மன்ற கூட்டத் தொடருக்கு கூட அழைப்பதில்லை. அந்த முதல்வர்கள் இவரை கால் காசுக்கு மதிக்கவில்லை.ஓடோடி வந்துட்டார். இருப்பாதிலேயே பாஜக பலவீனமாக இருக்கும் தொகுதியில் நிக்க வெச்சு இந்தம்மாவை முடிச்சு உட்டானுங்க.


veera
ஜன 13, 2025 15:22

அடுத்த தேர்தல்ல திமுக வுகு இருக்கு ஆப்பு.......அங்கே திராவிடம் பத்தி கழுவி உத்ரங்க.....மக்கள் ஒரு பக்கம் புலம்புரங்க......இதுல இவர் comedy vera


Sidharth
ஜன 13, 2025 14:14

சொல்லிட்டாங்க வெற்றி வீராங்கனை


Mediagoons
ஜன 13, 2025 14:10

மகா மட்டமான தேச துரோகிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை