உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழலின் அத்தாரிட்டி திமுக; மக்களை பிளவுப்படுத்தும் திமுக - பிரதமர் மோடி தாக்கு

ஊழலின் அத்தாரிட்டி திமுக; மக்களை பிளவுப்படுத்தும் திமுக - பிரதமர் மோடி தாக்கு

வேலூர்: ஊழலின் ஒட்டுமொத்த அத்தாரிட்டியாக திமுக.,வும், அதனை வழிநடத்தும் திமுக குடும்பமும் உள்ளதாகவும், மக்கள் ஒற்றுமையாக இருந்தால் திமுக செல்லாகாசாகிவிடும் என்பதால் மக்களை திமுக பிளவுபடுத்துவதாகவும் பிரதமர் மோடி கடுமையான விமர்சித்தார்.வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், ஆரணி 6 ஆகிய தொகுதிகளின் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ''எனது அருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்'' என தமிழில் பேசி பிரதமர் மோடி தனது உரையை துவக்கினார். அவர் பேசியதாவது: வரவுள்ள தமிழ் புத்தாண்டு தினத்திற்கான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் வளம் தரும் ஆண்டாக அமையட்டும். தமிழ் மக்களின் ஆசிர்வாதம் என்றும் எப்போதும் எனக்கு உண்டு; தமிழ் மக்களுக்காக தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணிக்கிறேன்.

தமிழகம்

2014ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை; எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. 21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதத்தை வளர்ச்சி அடைந்த் நாடாக்குவோம். இன்றைய உலகத்தில் பலமிக்க நாடாக இந்தியா உள்ளது; அதில் தமிழகத்தின் பங்களிப்பு பெரியதாக உள்ளது. தமிழக இளைஞர்கள் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள். இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழகத்தின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது.

திமுக

வலிமையான இந்தியாவுக்கான அடித்தளத்தை கடந்த 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு திமுக தடையாக உள்ளது. திமுக ஒரு குடும்ப கம்பெனியாக செயல்பட்டு வருகிறது; அவர்களின் குடும்ப அரசியலால் தமிழகத்தன் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை திமுக அரசு, ஊழல் செய்து வருகிறது. தமிழக இளைஞர்கள் முன்னேற முடியாமல் உள்ளனர். திமுக.,வினர் அனைத்திலும் அரசியல் செய்கின்றனர்.ஊழலின் ஒட்டுமொத்த அத்தாரிட்டியாக திமுக.,வும், அதனை வழிநடத்தும் திமுக குடும்பமும் உள்ளது. ஜாதி, மதம், மொழி ரீதியில் தமிழக மக்களிடம் திமுக பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. தமிழக மக்கள் ஒற்றுமையாக இருந்தால், திமுக செல்லாக்காசாகிவிடும் என்பதால் திமுக மக்களை பிளவுப்படுத்துகிறது. திமுக.,வின் பிரித்தாளும் அரசியலை அம்பலப்படுத்தாமல் ஓயமாட்டேன்.

வளர்ச்சிக்காக ஓட்டு

உலகம் முழுவதும் தமிழின் பெருமை தெரிய வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியை கற்று வருகிறேன். திமுக காங்கிரஸ் ஆட்சியில் தான் கட்சத்தீவை தாரை வார்த்து விட்டார்கள். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்டு வந்திருக்கிறோம். தமிழகம் பெண் சக்தியை ஆதாரிக்கும் பூமி; ஆனால் இண்டியா கூட்டணியினர் பெண்களை அவமதிக்கின்றனர். பெண்களை இழிவுப்படுத்துவதில் திமுக.,வும், காங்கிரசும் முன்னணியில் இருக்கின்றனர். ஏப்.,19ல் பா.ஜ., கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கானது. இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளி செங்கோல்

பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு வேட்பாளர்கள் சார்பில் வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் பொன்னாடை போர்த்தி, பிரதமர் மோடியை வேட்பாளர்கள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

R.RAMACHANDRAN
ஏப் 11, 2024 09:00

இந்த நாட்டில் எதிர் கட்சிகள் குரல் எழுப்பவில்லை எனில் பெட்ரோல் டீசல் விலை லிட்டர் ரூபாய் ஆகி இருக்கும் சமையல் எரி வாயு ரூபாய் ஆகி இருக்கும் இதன் அடிப்படையில் மற்ற அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் எகிறி இருக்கும் மாநிலங்களில் ஆட்சி இந்திய அரசமைப்பில் உள்ளவாறு நடைபெறவில்லை எனில் இந்திய அரசமைப்பு உறுப்பு ல் ஒன்றிய அரசு மாநில அரசுகள் இந்திய அரசமைப்பில் உள்ளவாறு ஆட்சி நடத்துவதை உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளதை இந்தியா அரசமைப்பு அமலுக்கு வந்து ஆண்டுகள் ஆகியும் ஒன்றிய அரசு கடமையை செய்ய தவறி வருகிறதுஏனெனில் ஒன்றிய அரசும் இந்திய அரசமைப்புப்படி நடத்தப்படாமல் காட்டாட்சி நடத்தப் படுகிறது அதில் உள்ள அதிகார வர்க்கத்தால் இதையெல்லாம் மக்கள் கருத்தில் கொள்வது எக்காலம் அப்போது தான் இந்திய வளர்ந்த நாடாகும் அதுவரை ஆளும் கட்சிகளுக்கு நிதியை வாரி வழங்குபவர்கள் லஞ்சம் இல்லாமல் சேவை இல்லை எனும் அதிகார வர்கம் ஆகியோர் மட்டுமே பொருளாதாரத்தில் எட்ட முடியாத அளவிற்கு வளர்வார்கள்


vijai seshan
ஏப் 11, 2024 00:35

சூப்பர் மோடி ஜி சார்


Barakat Ali
ஏப் 10, 2024 14:27

கொள்ளையர்களை பற்றிய உண்மைகளைப் புட்டுப்புட்டு வைப்பதால் அவர்கள் இவர்மீது ஆற்றொண்ணா ஆத்திரத்தில் இருக்கின்றனர்


Barakat Ali
ஏப் 10, 2024 14:26

ஞமலியின் வாயில் கோலை விடுவது என்பது இதுதான்


Lion Drsekar
ஏப் 10, 2024 13:57

இதையேதான் அவர்களும் பேசுகிறார்கள்? மைலாப்பூர் திருடன் என்று கூறுவார்கள் முன்பெல்லாம் எல்லோரும் மொட்டை மாடியில் படுத்து உறங்குவார்களாம் அப்படி இருக்க ஒரு வீட்டின் மொட்டை மாடியிக்கு சென்ற திருடன் பிடிபட்டால், திருடன் திருடன் என்று எல்லோரும் குரல் கொடுப்பார்கள் திருடன் அவர்களிடம் இருந்து தப்பித்து அடுத்து அடுத்து ஒவ்வொரு மொட்டை மாடியாக கூட்டத்தோடு கூட்டமாக அவனும் திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே தப்பித்துக்கொள்வான் அந்த நினைவு வருகிறது வந்தே மாதரம்


karupanasamy
ஏப் 10, 2024 13:38

தமிழகத்தை போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாற்றிக்கொண்டு இருக்கின்றனர் மக்களே டாஸ்மாக் சரக்கு துர்நாற்றம் வீசும் ஆனால் புதிய சரக்கு எந்த நாற்றமும் வீசாது நம் வீட்டு பிள்ளைகளை நாம் தான் இந்த கொடிய போதைப்பொருள் மாபியாக்களிடமிருந்து காப்பாற்றவேண்டும் வாக்களிப்போம் தாமரைக்கு வேரறுப்போம் திமுகவை


surya krishna
ஏப் 10, 2024 13:14

இவர்கள் பிரிவினைவாதிகள் மட்டுமல்ல தேச இன துரோகிகள் கொள்ளைக்காரர்கள். இந்து விரோதிகள்


Kasimani Baskaran
ஏப் 10, 2024 12:49

அந்தக்கால தீம்கா ஊழலில் உதாரணம் இந்தக்கால தீம்கா ஒரு சோப்ளாங்கிகளின் கூட்டம் ஆதீம்காவுடன் கூட ஒற்றுமையாக இருந்து பங்கு போடக்கூட துப்பில்லை எப்படி பத்துக்கு மேற்பட்ட மந்திரிகள் மீது வழக்கு வருமளவுக்கு விட்டார்கள் எடப்பாடி என்ன விலைக்கு வாங்க முடியாத ஆளா? வசூல் மெசின், அரம் போன்ற முன்னாள் ஆதீம்கா குப்பைகளை வைத்து இராட்ஜியம் நடத்துவது வெட்கக்கேடு தீம்காவில் ஒரிஜினலானவர்கள் மீது நம்பிக்கையில்லை என்பதே மிக அடிப்படை பிரச்சினை அமித்ஷாவை பணித்திருந்தால் அதை வைத்தே தீம்காவை ஐந்து அணிகளாக உடைந்திருப்பார் அண்ணாமலையை விட்டு நீதி, நேர்மை என்று பேசிக்கொண்டு நேரத்தை வீணடிக்கிறார்கள்


vijai
ஏப் 10, 2024 12:48

மோடி ஜி சூப்பர் திருட்டு திராவிடம் ஒழியனும் தமிழ்நாட்டுல


Ramanujadasan
ஏப் 10, 2024 12:33

மோடி அவர்களை ஒவ்வொரு வார்த்தையும் லக்ஷம் பெறும் இதை பார்த்து விட்டு எந்த ஒரு திமுக காரனும் எங்கே லக்ஷம் , எங்கே லக்ஷம் என வழக்கம் போல அலைந்து திரிய வேண்டாம்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ