உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெத்ஆம்பெட்டமைன் கடத்தல் நாகையில் தி.மு.க., பிரமுகர் கைது

மெத்ஆம்பெட்டமைன் கடத்தல் நாகையில் தி.மு.க., பிரமுகர் கைது

சென்னை : நாடு முழுதும், 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப் பொருள் சப்ளை செய்து வந்த, நாகை மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், 'புல்லட்' மகாலிங்கம், மஹாராஷ்டிரா மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 63; தி.மு.க., பிரமுகர். இவரை, 'புல்லட்' மகாலிங்கம் என, அழைக்கின்றனர். வீட்டில் சோதனை ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். அதேபோல, மகாலிங்கத்தின் மகன் அலெக்ஸ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்துள்ளார். இவர்கள் நாடு முழுதும் மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, கடந்தாண்டு நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் காவல் நிலைய போலீசாரால் மகாலிங்கம் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தார். 2023ல், டில்லியில் வேன் ஒன்றில் மெத் ஆம்பெட்டமைன் கடத்திய வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர், மகாலிங்கத்தின் கூட்டாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, டில்லியைச் சேர்ந்த என்.சி.பி., அதிகாரிகள், விழுந்தமாவடியில் உள்ள மகாலிங்கம் வீட்டில் சோதனை செய்தனர். அதேபோல, கடந்தாண்டு ஏப்ரலில் தஞ்சாவூரில் இருந்து, புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத் ஆம்பெட்டமைன் கடத்திய போது, என்.சி.பி., எனப்படும், சென்னை மண்டல மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், அலெக்ஸ் கைது செய்யப்பட்டார். இவரிடம், 2 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. என்.சி.பி., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மகாலிங்கம் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் போதைப் பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பல கோடி ரூபாயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி இருப்பதும், வெளிநாடுகளில் முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சமீபத்தில் மகாலிங்கம் மற்றும் அலெக்ஸ் ஆகியோருக்கு சொந்தமான, 7.82 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளனர். கமிஷன் இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், 43 கிலோ மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் தொடர்பாக, யோகேஷ் என்பவரை பிடித்து, அம்மாநில போலீசார் விசாரித்துள்ளனர். கடத்தலுக்கு பின்னணியில் மகாலிங்கம் இருப்பது தெரியவந்தது. இவர், போதைப் பொருள் கடத்தலுக்காக, 10 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்த தகவலும் தெரியவந்தது. இதையடுத்து, நாகப்பட்டினம் சென்ற மஹாராஷ்டிரா போலீசார் நேற்று, மகாலிங்கத்தை கைது செய்து, அம்மாநிலத்திற்கு அழைத்துச் சென்று உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

shakti
ஜூலை 31, 2025 17:21

இந்த மகாலிங்கம் கிறிஸ்டினாக மதம் மாரி ரொம்ப நாள் ஆகுது. அவரோட கிறிஸ்டின் பேரை போடுங்கள்


Ess Emm
ஜூலை 30, 2025 18:49

இவனுங்களை தூக்கிலிடுங்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 30, 2025 12:57

அயலக அணியை பாஜக ஒடுக்குனா வேற என்னதான் பண்ணுவாங்களாம்


saravan
ஜூலை 30, 2025 12:19

நீதிமன்றம் எப்படியும் ஜாமீன் கொடுத்துவிடும்...


Keshavan.J
ஜூலை 30, 2025 10:21

மஹாலிங்கம் மகன் பெயர் அலெக்ஸ். சூப்பர் இது ரொம்ப புதுசா இருக்கு.


K V Ramadoss
ஜூலை 30, 2025 09:36

மேலுமொரு திமுக காரன் போதை கடத்தலில் பிடிபடுகிறான். திராவிட கைலாசசாரத்தின் முன்னேற்றம்தான்


தமிழ் நாட்டு அறிவாளி
ஜூலை 30, 2025 09:26

தமிழ் காட்டில் பல குற்றங்கள் அரசியல் வாதிகளால் தான் செய்யப்படுகிறது. காரில் ஒரு கோடி, கரை வேஷ்டி என இருந்தால் முக்கால் வாசி அயோக்கியனாகத்தான் இருக்கிறான்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 30, 2025 09:17

இவர் கயலக அணித்தலைவர்?


Padmasridharan
ஜூலை 30, 2025 07:37

இத்தன தடவ பிடிச்சும், வெளியில் வந்து மறுபடியும் பன்றாருன்னா அரசியல் பலமா, காவலர்கள் துணையா


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 30, 2025 10:07

போதை ஆர்வலர்களின் தேவையை தீர்த்து வைக்கிறார் ..


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 30, 2025 06:40

தி.மு.க., பிரமுகர்களை சுயதொழில் செய்யவிடாமல் முடக்கினால் அவரகள் எப்படி பிழைப்பார்கள் ..மெத்ஆம்பெட்டமைன் கடத்தல் என்று செய்தி போட்டு கழகத்தினரை கேவலப்படுத்தாதீர்கள் முறைகேடான ..மெத்ஆம்பெட்டமைன் பரிமாற்றம் என்று எழுதுங்கள் .. அப்போதுதான் மெத்ஆம்பெட்டமைன் அருந்துவதால் என்பதும் பக்கவிளைவுகள் குறையும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை