உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாரிசுகளுக்கு சீட் கேட்டு தி.மு.க., தலைகள் படையெடுப்பு

வாரிசுகளுக்கு சீட் கேட்டு தி.மு.க., தலைகள் படையெடுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

வரும் சட்டசபை தேர்தலில் வாரிசுகளுக்கு 'சீட்' கேட்டு, தி.மு.க., சீனியர்கள், கட்சித் தலைமையிடம் தொடர்ந்து பேசி, நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.திருவண்ணாமலையில் கடந்த டிச. 14ல் தி.மு.க., இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடந்தது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் வேலு, துரைமுருகன், காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lv9sidwc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நம்பிக்கை

அந்த மாநாட்டில், துணை முதல்வரும் கட்சியின் இளைஞர் அணி செயலருமான உதயநிதி பேசும்போது, ''சட்டசபை தேர்தலில் இளைஞரணியைச் சேர்ந்தோருக்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலர் துரைமுருகன் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கிறேன்.''இந்த கோரிக்கை நுாறு சதவீதம் ஏற்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில், அடுத்த முறை சட்ட சபைக்கு தி.மு.க., சார்பில் கூடுதல் எண்ணிக்கையில் இளைஞர்கள் செல்வர்'' என பேசினார். இந்த பேச்சு, தி.மு.க.,வில் சீனியர் களாக இருக்கும் அமைச்சர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், இந்த விஷயத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் முடிவில் அவர்கள் இருப்பதாக தெரிகிறது.அதாவது, இளைஞர்களுக்குத்தான் வாய்ப்பு என்கிறபோது, இளைஞர்களாக இருக்கும் தங்களுடைய சொந்த வாரிசுகளை களம் இறக்க, அவர்கள் முடிவெடுத்துள்ளனர். தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபைத் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக அமைச்சர் துரைமுருகன் உள்ளார். வயது முதிர்வு காரணமாக, வரும் தேர்தலில் தனக்கு 'சீட்' கிடைக்காமல் போகலாம் என நினைக்கிறார்.அதனால், காட்பாடி தொகுதியில் தன் மருமகள் சங்கீதாவுக்கு சீட் கேட்டு பெறலாம் என நினைக்கிறார். ராணிப்பேட்டை தொகுதியில் வென்று அமைச்சராக இருக்கும் காந்திக்கு, அவ்வப்போது உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுவதால், அவரும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. தன் மகனும் கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநில நிர்வாகியுமான வினோத் காந்திக்கு, ராணிப்பேட்டை தொகுதியை வாங்கும் முடிவில் இருக்கிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நேரடியாக பேச்சு

அவரும் வயதுமூப்பு காரணமாக, வரும் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகிறார். தன் மகனும், மா.செ.,வுமான கவுதம சிகாமணியை, திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட வைக்க திட்டமிடுகிறார். இதற்காக, கட்சித் தலைமையிடம் நேரடி யாகவே அவர் பேசி வருகிறார். இதே போலவே, தமிழகத்தில் சீனியர் தி.மு.க., தலைவர்களாக இருக்கும் பலரும், தங்களுடைய வாரிசுகளை வரும் தேர்தலில் களம் இறக்க முடிவெடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Siva Balan
டிச 21, 2025 11:43

தொண்டர்கள் என்னும் திமுக கம்பெனி ஊழியர்கள் கடைசிவரை அடிமையாகதான் இருக்கவேண்டுமா.....


HoneyBee
டிச 21, 2025 11:11

எப்படியும் தோற்று ஓடும்.. இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால்


panneer selvam
டிச 21, 2025 13:44

Unity among Hindu is a mirage thanks to splendid propaganda by Dravidians and their cronies


Anantharaman Srinivasan
டிச 21, 2025 11:11

கட்சிக்கு திமுக என்ற பெயரை மாற்றி வாரிசுகள் முன்னேற்றக்கழகம் என வைத்து விடலாம்.


saravan
டிச 21, 2025 11:07

இவங்க தான் சமூக நீதியை காப்பவர்கள் மொத்தமும் குடும்ப கட்சி வக்கத்த பயலுக குடும்பம் காலம் பூரா ஓட்டைப் போட்டக்கொண்டு காலத்தை ஓட்டுகிறது


Murugesan
டிச 21, 2025 10:52

இந்த திமுக அயோக்கியர்கள் அழிந்தால் தான் நாடு உரூப்படும் ,


ராமகிருஷ்ணன்
டிச 21, 2025 10:25

குடும்ப கொள்ளை நடந்தும் திமுக, சுருட்டிய பணத்தை வெளியில் விடுவதற்கு கிறுக்கன்களா. மேலும் மேலும் சுருட்டி முழுங்க வாரிசு அரசியல் தான் திமுகவின் முடிவாக இருக்கும். திமுகவின் தொண்டர்கள் (குண்டர்கள்) கடைசி வரை போஸ்டர் ஒட்டும் அல்லக்கைகளாகவே இருக்க வேண்டியதுதான்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2025 10:19

பணம் சம்பாதிக்கத்தான் வாரிசுகளை இழுத்து உடுறோம் ன்னு நினைக்காதீங்க .... நாங்கள்லாம் தலைமுறை தலைமுறையா உங்களுக்கு தன்னலம் கருதாமல் சேவை செய்யத்தான் .....


N S
டிச 21, 2025 09:37

மோஸ்ட் டேஞ்சரஸ் துணை முதல்வர் பாணியில், மோஸ்ட் டேஞ்சரஸ் வாரிசுகள் உருவாகும் திட்டம். தமிழகத்திற்கு தன்னிகரில்லா புவி போற்றும் திராவிட மாடல் "அப்பாவின்" புத்தாண்டு பரிசு.


M.Sam
டிச 21, 2025 09:28

இது எல்லாம் ஒரு வெஸ் எந்த கட்சில இல்லை இந்த nilai


Naga Subramanian
டிச 21, 2025 09:23

முதியோர்கள் முன்னேற்ற கழகம்


சமீபத்திய செய்தி