உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு செலக்டிவ் அம்னீஷியா: சொல்கிறார் அண்ணாமலை

தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு செலக்டிவ் அம்னீஷியா: சொல்கிறார் அண்ணாமலை

சென்னை: ''சென்னையில் தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.,வினரிடம் போலீசார் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: புதிய கல்விக் கொள்கைக்கான கையெழுத்து இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் கையெழுத்து போட்டு ஆதரவு அளித்து உள்ளனர். குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கையெழுத்து போடுகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qc95y5ax&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் முன்னாள் கவர்னர் தமிழிசையிடம், போலீசார் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீதியில் மக்களை சந்திப்பது கட்சிகளின் கடமை.மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக முறையில் அவர்களின் கையெழுத்துக்கு வலிமை இருக்கிறது எனபதை எடுத்துக்காட்டும் பா.ஜ., தலைவர்களை சீண்டுவது, தமிழிசையை கைது செய்தது மட்டுமல்லாமல், அவரிடம் 3 மணி நேரம் போலீசார் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. ஆளுங்கட்சியினர் கொடுக்கும் உத்தரவு தவறு என்பதை தெரிந்து, அவர்களாக விடுவித்து உள்ளனர். இது தி.மு.க., அரசின் கோழைத்தனத்தையும் பயத்தையும் காட்டுகிறது.திருமாவளவன் சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துகிறார். மும்மொழிக் கொள்கை குறித்து பேசுவதற்கான திராணியை அவர் இழந்துவிட்டார். பொய் பேசியே திராணி இழந்துவிட்டார்.3வது மொழி கட்டாயம் ஹிந்தி சொல்லி கொடுக்கும் திருமாவளவன், தமிழக மக்களுக்கு பாடம் எடுக்கிறார். போலி அரசியல்வாதிகளை தோல் உரித்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் வெற்றி தான். தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு 'செலக்டீவ் அம்னீஷியா'. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தி.மு.க., அங்கம் வகித்த போது சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.676 கோடியும், தமிழ் வளர்ச்சிக்கு ரூ.75 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் ஹிந்தியை வளர்க்க, பார்லிமென்டில் 170 பரிந்துரைகள் வைத்தார். இன்று சென்னையில் மேடை ஏறி அவர் ஹிந்தி எதிர்ப்பு குறித்து பேசுகிறார். இந்த கொடுமை எல்லாம் பார்க்க வேண்டிய காலகட்டத்திற்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.அப்போது, தமிழ் வளர்ச்சிக்கு தி.மு.க., எதுவும் கிள்ளிப் போட்டதா? கூட்டணி ஆட்சியில் நடந்தது எல்லாம் கனிமொழி மறந்துவிட்டார். தற்போது அரசியலுக்காக பேசிக் கொண்டு உள்ளார். மொழியை தடுக்க இவர்களுக்கு உரிமை இல்லை. அதற்காக அவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடவில்லை. நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எதற்காக இரண்டு வகையான சமுதாயத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. தேவையில்லாமல் தொகுதி மறுசீரமைப்பு என பேசிக் கொண்டு உள்ளார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.முன்னதாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன.ஊழல் நாடாக தமிழகத்தை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள். வெட்கக்கேடு! இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

आपवी
மார் 07, 2025 09:27

அதிமுக வோடு பா.ஜ மேலிடம் கூட்டு வெக்கும்போது உங்களுக்கும் அதே அம்னீஷியா வந்துரும்.


பேசும் தமிழன்
மார் 07, 2025 08:25

மூடு... டாஸ்மாக்கை மூடு என்று கோலம் போட்டவர்.. இன்று நாங்கள் சாராய கடைகளை மூடுவது குறித்து ஒன்றும் சொல்ல வில்லை என்று கூறுகிறார்.. அப்போ முன்பு நீங்கள் எதிர்கட்சியாக இருந்த போது நடத்திய போராட்டம் எல்லாம் பொய்யா கோபால் ???


Varadarajan Nagarajan
மார் 07, 2025 07:28

எனக்கு தற்பொழுது வயது 65. திராவிட கட்சிகளின் தீவிர ஹிந்தி எதிர்ப்பு கொள்கையால் படிக்கும் காலத்தில் ஹிந்தி கற்க முடியாமல் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அதைபோல் சமவயது உடையவர்களும் அப்படித்தான் இருப்பார்கள். நான் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவன். எனது பணிக்காலத்தில் வேலை நிமித்தமாக பலமுறை வடமாநில நகரங்களுக்கு சென்றுள்ளேன். அப்பொழுதெல்லாம் ஹிந்தி தெரியாமல் பயணத்தின்போதும், தங்கும் விடுதிகளிலும், உணவு விடுதிகளிலும் பெரும் கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். வாழ்க்கைக்கு எதை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை யாரோ முடிவுசெய்வதால் நாம் கஷ்ட்டப்படவேண்டியுள்ளது. பலபொழி கற்கும் வாய்ப்பை அளித்தால் என்ன கற்கவேண்டும் என்பதை தேவைப்படுபவர்கள் முடிவுசெய்துகொள்வார்கள். தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் மும்மொழி கொள்கையில் அந்த வாய்ப்பு அரசு பள்ளியிலும் கிடைக்கும். அதை செய்யாக்கூடாது என ஏன் அரசியல்கட்சிகள் பிடிவாதம் பிடிக்கவேண்டும். தற்பொழுது மும்மொஷிக்கொள்கை எதையும் திணிக்கவில்லை. அரசியல்வியாதிகள்தான் கூடாது என அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தக்கூடாது என திணிக்கிறார்கள். மும்மொழி வேண்டாமையென்றால் தனியார் பள்ளிமுதல், உருது பள்ளிவரை அதை நடைமுறைப்படுத்தவேண்டியதுதானே. அப்படியென்றால் மத்திய அரசு நிதியை எதிர்பார்க்காமல் இருக்கட்டும்


अपावी
மார் 07, 2025 09:31

மிஸ்டர் வரதராஜன், உங்களுக்கு தேவைன்னா நீங்க இந்தி தனியா கத்துக்கிட்டிருக்கலாம். நான் அப்புடித்தான் கத்துக்கிட்டேன். தெலுங்கு, கன்னடாவும் எழுதப் படிக்கத் தெரியும். இந்தி வந்துச்சுன்னா, தமிழகம் மாதிரி ஆயிடும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 07, 2025 11:29

அப்பாவி என்ற பெயரை அபாவி என்று ஹிந்தியில் வைத்து கொண்டு இருக்கும் நீங்கள் எங்கே ஹிந்தி கற்றுக் கொண்டீர்கள். கட்டணம் செலுத்தி படிக்க முடியாதவர்கள் தான் அரசு பள்ளிகளில் படிக்கிறனர். அந்த மாணவர்கள் சரியாக சாப்பிட கூட முடியாத சூழல் இருந்த போது தான் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்து கல்வியை ஊக்குவித்தார். அப்படி பட்ட காமராஜரை எமர்ஜென்சி காலத்தில் வீட்டு சிறையில் வைத்து காந்தி ஜெயந்தி அன்று இறந்து போனார் அந்த மாமனிதர். தான் இறந்த பிறகும் தன்னை யாரும் நினைத்து எக்காலத்திலும் வேதனை படக் கூடாது என்ற காரணத்தால் அவர் காந்தி ஜெயந்தி அன்று சமாதி அடைந்தார். அதற்கு பிறகும் திராவிட கட்சிகள் மாறி மாறி ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும் கூட மக்கள் வாழ்க்கை தரம் முன்னேறவில்லை மதிய உணவு சாப்பிடக் கூட முடியாமல் இருந்த மாணவர்கள் தற்போது காலை உணவு கூட சாப்பிட முடியாமல் போனாதால் தான் நமது அப்பா முதல்வர் அவர்கள் முதலமைச்சர் காலை உணவு திட்டம் பள்ளிகளில் கொண்டு வந்து உள்ளார்கள். இப்படி பட்ட சூழலில் எப்படி சார் இந்த அரசு பள்ளி மாணவர்கள் காசு கொடுத்து வேறு மொழிகள் வேறு திறன்கள் கற்க முடியும். உணவு எப்படி அப்பா மூலமாக காலையிலும் ஐயா காமராஜர் மூலமாக மதியம் கிடைத்ததோ அது போல இனி அடுத்து 2026 திராவிட கட்சி அதிமுகவோ திமுகவோ அல்லது இந்த தாவெகவோ ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இரவு உணவு கூட சாப்பிட முடியாத சூழல் இருக்கும் என்பதால் இரவு உணவு கூட கொடுக்க வேண்டிய சூழல் தான் இருக்கும். ஏனெனில் பல வீடுகளில் மது பிரியர்கள் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே குடிப்பதால் குழந்தைகள் இரவு உணவு இல்லாமல் கஷ்டம் பட வேண்டி இருக்கும். இத்துணை கஷ்டத்தோடு எப்படி புரோ காசு கொடுத்து மூன்றாவது மொழி எக்ஸ்ட்ரா திறன் மேம்பாடு எல்லாம் கத்துக முடியும். தமிழக அரசை கடன் வாங்கி சிலவு செய்து மூன்றாவது மொழி ஏழை மக்கள் உங்கள் அரசின் படி சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் வறுமையில் இருக்கும் மக்களுக்கு கொடுங்க நாங்க கேட்கலை. எவனோ ஒரு மோடி மஸ்தான் கொடுக்கிறான் அதில் ஸ்டிக்கர் ஒட்டி உங்க பேர் போட்டாவது கொடுங்க அப்படின்னு தான் கேட்கிறோம்.


ramani
மார் 07, 2025 05:58

ஃப்ரூட் லேங்வேஜ்க்கு செலக்ட்டிவ் அம்னீஷியா மற்றும் இல்லை வேறே செலக்ட்டிவ் எல்லாம் இருக்கிறது. அதெல்லாம் ஒரு ஆளு. அவ சொல்வதை ஊடகங்கள் பிரசுகின்றன. கேவலம்.


Visu
மார் 07, 2025 04:14

உண்மைதான் அவங்க வூட்டுகாரர்யாருனு தெரியாத அளவுக்கு அம்னீஷியா


நிக்கோல்தாம்சன்
மார் 07, 2025 03:42

நீ உன்தந்தையை மாத்திரம் அப்பா என்று அழைக்கும் தமிழ் நாட்டுக்காரன் ஆனால் 9 லட்சம் கோடி கடன் என்று வாங்கி அதனை பின்வரும் நாளில் தமிழக பொதுமக்கள் கட்டும் இழிநிலை வந்துவிடக்கூடாது என்று இந்நாளைய முதல்வரிடம் கடனை அவரது சொத்தை விற்றாவது கட்டிவிட சொல்லேன் பார்ப்போம்


xyzabc
மார் 07, 2025 02:20

ரொம்ப கரெக்ட் ஆக சொன்னேங்க அண்ணா சார். வடை சாப்பிடப்ப டிமேல எல்லாம் சரியா இருக்கும்


B MAADHAVAN
மார் 07, 2025 00:06

திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு திட்டத்தில்தான் முதலில் கையெழுத்திடப்படும் என்று அப்பொழுதைய திமுக பொருளாளர் இன்றைய திமுக அப்பா மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தங்கை மற்றும் திமுக வின் அத்தையுமான கனிமொழி சொன்னது என்னாச்சு.. உண்மையில் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் சொன்னபடி அத்தை கனிமொழி அவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா தான் என்பது உறுதியாகிறது.


10 rs thala
மார் 06, 2025 22:46

தகுதி இல்லாத துணை முதலமைச்சர்.. அப்பா பேரை சொல்லி வந்தவர் எம்பி.. இவங்களுக்கு ஜால்ரா அடிக்க கொத்தடிமை 200 ஊபிஸ் கூட்டம்..


தமிழன்
மார் 06, 2025 21:59

எனக்கு தினமும் இந்த சாட்டையால் அடித்து பிச்சை எடுக்கும் கோமாளியின் ஒரு ஜோக்காவது கேட்காவிட்டால், சோறே இறங்குவதில்லை இவன் எப்போது டாக்டர் ஆனான்?? நீட் தேர்வு எழுதினானா?? திருவாரூர் திருடனும் கம்மியில்லை


Yakshan Yakshan
மார் 06, 2025 22:08

திராவிடியா கும்பலுக்கு வைத்தியம் பார்க்கும் மனநல மருத்துவர் அண்ணாமலை


krishna
மார் 06, 2025 22:13

UNAKKU CORRECTAA SET AAGUM KOMALI.


Kasimani Baskaran
மார் 06, 2025 22:45

கருத்தை கவனித்தால் திராவிட கல்வியில் பட்டம் வாங்கி குழம்பிப் போனது போல தெரிகிறது. எதற்கும் நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது.


Kjp
மார் 06, 2025 23:12

அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல திராணியற்ற கொத்தடிமை தமிழா. திட்டுவதை விட்டு விட்டு பதில் சொல்ல உன்னால் முடியுமா.


Raj S
மார் 07, 2025 01:25

சிலர் சோறு சாப்பிடும்போது உப்பு போட்டுக்க மாட்டாங்க போல... இல்லனா திருட்டு திராவிட கும்பலுக்கு முட்டு குடுத்து இப்படி தன்னோட தற்குறித்தனத்தை பொது வெளியில் ஒதுக்குவாங்களா?? பேர தமிழன்னு வெச்சுகிட்டு தெலுங்கு கும்பல்கிட்ட புடிச்சி குடிக்கலாமா??


Visu
மார் 07, 2025 04:12

யார் அந்த சாருனு கேட்க துப்பில்ல


Nagendran,Erode
மார் 07, 2025 06:33

கொல்ட்டி பயபுள்ளைக எல்லாம் தமிழன்னு சொல்லிக்கிட்டு தமிழகத்தில் சுற்றித் திரியிதுகள்.


முக்கிய வீடியோ