மேலும் செய்திகள்
ஓடையை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு
09-Oct-2024
மதுரை : திருச்சி சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:எனது தந்தை திருச்சி சிவா, ராஜ்யசபா தி.மு.க., எம்.பி., நான் பா.ஜ.,வில் ஓ.பி.சி.,அணி மாநில பொதுச்செயலாளராக இருந்தேன். தற்போது அக்கட்சியில் நான் இல்லை.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனத்திற்குரிய வகையில் பேசிய பல ஆடியோ பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன். இதனால் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கின்றனர். எங்களை மர்ம நபர்கள் கண்காணிக்கின்றனர். எனக்கும், குடும்பத்தினருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி போலீசாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எம்.நிர்மல்குமார் நாளை (நவ.,7) ஒத்திவைத்தார்.
09-Oct-2024