உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏமாற்றவும், பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.,வுக்கு தெரியும்: தமிழக பா.ஜ.,

ஏமாற்றவும், பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.,வுக்கு தெரியும்: தமிழக பா.ஜ.,

சென்னை : 'வக்ப் மசோதாவுக்கு எதிரான தி.மு.க.,வின் நாடகம் எல்லாம், சிறுபான்மை ஓட்டு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:

தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்திருப்பதும், வக்ப் மசோதாவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதும், தி.மு.க.,வின் இன்றைய நாடகம். இந்த நாடகம் எல்லாம், சிறுபான்மை ஓட்டு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே. முந்தைய வக்ப் சட்டத்தால் பாதிக்கப்பட்டது ஹிந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்துவர்களும் என்பதை முதல்வர் உணரவில்லையா? தயவு செய்து, உங்களின் நாடகத்திற்கு சட்டசபையை பயன்படுத்த வேண்டாம் முதல்வரே. முதல்வர் ஸ்டாலினின் அடுத்த நாடகம், 'வக்ப் மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள்' என்ற தலைப்பில் ஒரு நுாலை எழுத, தி.மு.க.,வில் ஒருவரை நியமிப்பதாக இருக்கும். இதை, தி.மு.க., தேர்தல் யுக்தியாக பயன்படுத்தி, 2026 சட்டசபை, 2029 லோக்சபா தேர்தல்களில் அப்பாவி இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்தும். தி.மு.க.,வுக்கு ஏமாற்றவும், பிரிக்கவும் மட்டும் தான் தெரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gnana Subramani
ஏப் 04, 2025 10:04

அறிவாலயத்தில் கடைசி செங்கல் உருவும் வரை அமித் ஷா காத்து இருப்பாரா இல்லை அனுப்பி விடுவாரா


Barakat Ali
ஏப் 04, 2025 09:03

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவன் வாக்கினைச் சொல்லிச்சொல்லி பட்டியலினத்தவரை அவமதித்துவரும் ஒரே கட்சி திராவிட மாடல் கட்சி .......


Mario
ஏப் 04, 2025 08:48

பாவம் முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க


Yes your honor
ஏப் 04, 2025 10:29

பாவம், நீங்கள் முதலில் உங்கள் கட்சியில் தலைவராகுங்கள் அல்லது, அட்லீஸ்ட் உங்கள் கட்சியின் பெயரை கூறிக்கொண்டு பொதுமக்கள் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடிகிறதா என்றாவது பாருங்கள்.


vijai hindu
ஏப் 04, 2025 14:15

வாய மூடும் லண்டன்ல இருந்து வாய்ஸ் இல்ல


Mani.M
ஏப் 04, 2025 07:54

சிறுபான்மையினர் என்ட்ற போர்வையில் நாட்டில் பல்வேறு அட்டூழியங்கைளை மிகவும் தைரியமாக அரங்கேற்றுவர்களுக்கு துணைபோகும் திமுக வை அகற்றவேண்டும்.


மாறன்
ஏப் 04, 2025 06:23

உனக்கு குழி பறிக்க மட்டும் தெரியும்


சமீபத்திய செய்தி