உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாளை., சிறையில் தி.மு.க.,திடீர் போராட்டம்

பாளை., சிறையில் தி.மு.க.,திடீர் போராட்டம்

திருநெல்வேலி : பாளையங்கோட்டை மத்திய சிறையில் தி.மு.க.,வினர் வேனை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட தி.மு.க.,செயலாளர் பூண்டி கலைவாணன், கடந்த 30ம் தேதி பள்ளிகள் முன்பாக சமச்சீர் கல்வியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடசென்றபோது கைதானார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை இன்று காலையில் பொதுசொநல்லை நகர தி.மு.க.,செயலர் மாலைராஜா <உள்ளிட்டவர்கள் சந்திக்க சென்றனர். பூண்டி கலைவாணன் திருத்துறைப்பூண்டியில் அடிதடியில் ஈடுபட்டு ஒரு பேன்சி கடையை சேதப்படுத்தியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் கைது செய்யப்பட்ட பூண்டி கலைவாணன் இன்று காலையில் போலீஸ் வேனில் திருவாரூருக்கு அழைத்துச்சென்றனர். காலையில் கலைவாணனை சந்திக்க சென்ற தி.மு.க.,வினர் அவரை சந்திக்க முடியாததால் அவரை அழைத்துச்சென்ற போலீஸ் வேனை மறித்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் பாளை.,மத்திய சிறை வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை