அரசு பள்ளிகளை திட்டமிட்டு சீரழிக்கும் தி.மு.க., ஆட்சி
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, கடந்த இரு ஆண்டுகளில் 5.31 லட்சம் குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, திட்டமிட்டு அரசு பள்ளிகளை சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது. இரு ஆண்டுகளில், இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்றால், தி.மு.க.,வின் ஐந்தாண்டு ஆட்சியில், 13.28 லட்சம் குறைந்திருக்கும். அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை, ஆண்டுக்கு 5 முதல் 6 சதவீதம் குறைந்து வருவது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இதற்கான காரணங்களை கண்டறிந்து, தமிழக அரசு சரி செய்ய வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்தியவர் காமராஜர் என்றால், அவற்றை சீர்குலைத்தது தி.மு.க., அரசு என்பது, வரலாற்றில் அழிக்க முடியாத அளவுக்கு, பதிவாகி விட்து. -- அன்புமணி, தலைவர், பா.ம.க.,