உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதில் போய் அரசியல் செய்றீங்களே; இ.பி.எஸ்., குற்றச்சாட்டை மறுத்த ஆர்.எஸ்.பாரதி

இதில் போய் அரசியல் செய்றீங்களே; இ.பி.எஸ்., குற்றச்சாட்டை மறுத்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை: 'உயிரிழப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., அரசியல் செய்யக்கூடாது' என்று தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்றவர்களில் 5 பேர் பலியாகினர். இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., தமிழக அரசின் செயலற்ற தன்மையால் 5 பேர் உயிரிழந்தனர். அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க நினைக்கக்கூடாது என்று சரமாரியாக கண்டனம் தெரிவித்து இருந்தார்.இந் நிலையில் இ.பி.எஸ்., குற்றச்சாட்டு குறித்து தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது; வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் பலியானவர்கள் விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம். இந்த இழப்பு வருத்தமான ஒன்று. நிகழ்ச்சிக்காக எல்லாவிதமான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது.அனைவரும் குடையுடன் வரவேண்டும், தண்ணீர் பாட்டில் எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையும் மீறி சிலர் அஜாக்கிரதையாக அங்கு வந்துள்ளனர். உடல்நலம் சரியில்லாதவர்களே போயிருக்கிறார்கள். இதுதான் அவர்கள் உயிரிழக்க காரணம். இது வருத்தத்துக்கு உரிய ஒன்றுதான். என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்பது பற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் கூறியிருக்கிறார். உயிரிழப்புக்கான காரணம் தொடர்பான அறிக்கையே இன்னமும் வரவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறுவது தவறான ஒன்று. எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசதிகள் செய்திருக்கின்றனர். 2015ல் அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா நடத்திய கூட்டத்தில் 6 பேர் பலியானதாக செய்திகள் உள்ளன. அதை எல்லாம் மறந்து விடக்கூடாது. உயிரிழப்பை வைத்துக் கொண்டு அரசியல் செய்யக்கூடாது. இதையும், அரசியலையும், தொடர்புபடுத்தி பேசக்கூடாது. இவ்வாறு ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 07, 2024 20:38

அரசியல் செய்யவில்லை. ஐயோ உயிர் பலியானதே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறோம். உங்களுக்கு அந்த ஆதங்கம் கூட இல்லை. என்ன தலைவர்களோ நீங்கள்? போன உயிர்கள் உங்கள் உறவினராக இருந்தால் நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள்...?


T.Senthilsigamani
அக் 07, 2024 20:13

எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் - எடப்பாடி பழனிச்சாமி முதல்வருக்கு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நறுக் கேள்வி - Oct 24 ,2020 . காலம் திரும்புகிறது -முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் திராவிட நச்சு விதைகளை வைத்தவர் அறுவடை செய்யும் காலம் இது


Naga Subramanian
அக் 07, 2024 18:29

அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம் என்று சொல்பவர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள், மற்றவர்களுக்கு அறிவுரை கூற. தங்களால்தான் தலித்துகளுக்கு அனைத்து உயர் பதவியும் கிடைத்தது என்று வாய் கூசாமல் சொன்ன இந்த நபருக்கு, ஆளும் கட்சியின் அனுக்கிரஹம் எப்படியெல்லாம் பேச வைக்கிறது பாருங்கள்.


சமீபத்திய செய்தி