உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கொள்ளையடித்து குவித்தபோது மூச்சு பேச்சு இல்லாத தி.மு.க.,

 கொள்ளையடித்து குவித்தபோது மூச்சு பேச்சு இல்லாத தி.மு.க.,

தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வராகவும், அவரது அண்ணன் அழகிரி, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தபோது, மாநில சுயாட்சி பற்றி சிந்திக்காமல், மத்திய - மாநில அரசுகளின் உறவை மேம்படுத்த ஒரு குழு உருவாக்கியது ஏன்? மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து, பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்து குவித்த வரை, தி.மு.க.,வுக்கு மூச்சு பேச்சு இல்லை.இனி எப்போதுமே, மத்திய அமைச்சராக தி.மு.க.,வுக்கு வாய்ப்பில்லை என்பதை நன்கு உணர்ந்து விட்டதால், பழைய துருப்பிடித்த மாநில சுயாட்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளீர்களா அல்லது தி.மு.க., ஆட்சியின் போதை மருந்து கலாசாரம், சட்டம் - ஒழுங்கு சீர்கெடு, ஊழல் ஆகியவற்றை மறைக்க, மாநில சுயாட்சி என்ற புது அவதாரத்தை எடுத்துள்ளீர்களா? கடந்த 77 ஆண்டுகளாக தமிழக மக்களை திட்டமிட்டு ஏமாற்றி, மடைமாற்றம் செய்த தி.மு.க.,வின் மோசடி இனி நடக்காது. - ராமலிங்கம், துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ