உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பூத் ஏஜன்ட் நியமனத்தில் முதலிடத்தில் தி.மு.க.,

 பூத் ஏஜன்ட் நியமனத்தில் முதலிடத்தில் தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் விபரத்தை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி அதிக முகவர்களை நியமித்து, தி.மு.க., முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில், ஒரு மாதத்திற்கு முன், 68,470 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது, 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், முகவர்கள் நியமிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படும் நிலையில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், முகவர்கள் இருப்பதாக, அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், பெரும்பாலான கட்சிகள், முகவர்களை நியமிக்காதது, தெரிய வந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், எத்தனை ஓட்டுச் சாவடிகளுக்கு, முகவர்களை நியமித்துள்ளனர் என்ற விபரத்தை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, தி.மு.க., 65,210 ஓட்டுச் சாவடிகளுக்கு முகவர்களை நியமித்து, முதலிடத்தில் உள்ளது. அ.தி.மு.க., 63,707; தமிழக பா.ஜ., 54,258; தே.மு.தி.க., 31,849; தமிழக காங்கிரஸ் 27,158 என ஓட்டுச்சாவடி முகவர்களை நியமித்துள்ளன. இதுபோல, நாம் தமிழர் கட்சி 1,749; விடுதலை சிறுத்தைகள் கட்சி 146; பகுஜன் சமாஜ் கட்சி 86; ஆம் ஆத்மி 52 ஓட்டுச்சாவடிகளுக்கு முகவர்களை நியமித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

duruvasar
டிச 22, 2025 10:47

கள்ள ஒட்டு கும்பலுக்கு இது அடிப்படை தேவை.


ராமகிருஷ்ணன்
டிச 22, 2025 10:27

கள்ள ஓட்டு போட முஸ்தீபு இது. மற்ற கட்சிகாரர்கள் படு உசாராக இருக்க வேண்டும் மிக அதிக அளவில் விலைக்கு போகாத பூத் ஏஜென்டுகளை நியமிக்க வேண்டும்


naranam
டிச 22, 2025 10:08

பாஜக வெறும் வெத்து வேட்டு தான் போல..


SVR
டிச 22, 2025 08:08

இதற்கு நோபல் பரிசு கொடுக்கலாமா?


raja
டிச 22, 2025 07:57

இதில் முதலிடத்தில் இருந்தாலும் வரும் தேர்தலில் இந்த திருட்டு திராவிட கொள்ளை கூட்ட திமுக கட்சி நிடாவுக்கு கீழ் தான் ஒட்டு வாங்கும். ..தமிழ் இந்துக்கள் ஒன்றிணைந்து விட்டார்கள் இவர்களை அடித்து விரட்ட.....


BHARATH
டிச 22, 2025 09:53

அட போயா


Raj Kamal
டிச 22, 2025 11:42

இந்த சுதந்திர திருநாட்டில், கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு.


mindum vasantham
டிச 22, 2025 07:32

இந்த நுட்பமான தெலுகு அரசியல் நமக்கு வேணுமா


தமிழ் மைந்தன்
டிச 22, 2025 06:28

ஊழல் செய்வது திமுக கொள்கை


பாரத புதல்வன்
டிச 22, 2025 05:10

ஊழலில் முதலிடத்திலும் தி மு க தான்...


Palanisamy Sekar
டிச 22, 2025 05:07

திமுக என்றாலே தில்லு முள்ளு கழகம் எனபதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. இந்த முகவர்களுக்கு தேவைக்குக்ம் மேலே கவனித்துவிடுவார்கள். அதிலும் திமுக தான் பிற கட்சிகளை காட்டிலும் அதிக கவனிப்பை காட்டுகின்றது. ஏற்கனவே யூ டியூப் முகவர்களை அழைத்து விருந்துவைத்து கவனித்துவிட்டார்கள். அதனால் யூ டியூபில் திமுகவுக்கு சாதகமான செய்திகளை தொடர்ந்து பரப்புவார்கள். திட்டமிட்டு திமுக அனைத்தையும் செய்கின்றது. ஆனால் மக்களின் மனதில் நம்பிக்கையை தகர்த்துக்கொண்டது. என்பது மட்டும்தான் எதிர்க்கட்சிகளுக்கு நிம்மதியான செய்தி. ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஜெயித்தது என்றால் அது திமுகவின் ஊழல்களால் நொந்துபோன மக்களின் வெறுப்புணர்வே அன்றி எதிர்க்கட்சிகளின் உழைப்பு என்று கிடையவே கிடையாது.


பிரேம்ஜி
டிச 22, 2025 07:38

சரியாகச் சொன்னீர்கள்! எதிர்க்கட்சிகள் இதுவரை ஒன்று சேரவும் இல்லை! உழைக்க தயாராகவும் இல்லை!


ramesh
டிச 22, 2025 09:21

பழனிசாமி சேகர் அவர்களே தங்கள் கருத்துக்கள் எப்போதும் படிக்கும் வகையில் இருக்கும் . ஆனால் தற்போது எழுதிய கருத்தை பார்க்கும் போது தாங்களும் கிணற்று தவளையை போல வெளியே வந்து மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பது தெரியாமல் போட்டு இருக்கிறீர்களே.


Kadaparai Mani
டிச 22, 2025 09:36

Sekar anti establishment wave sweeping in Tamilnadu and aiadmk alliance will sweep polls. Dmk may not secure even opposition leader post. Aiadmk alliance partner will become opposition leader in 2026 like 2011.


Mani . V
டிச 22, 2025 05:06

பின்ன, கொள்ளடித்த பணத்தில் அண்டா, குண்டா எல்லாம் ரெடியாகி இருப்பதைத்தான் பார்த்தோமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை