உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / படித்தவர்களையும் ஏமாற்றும் தி.மு.க.,: முன்னாள் அமைச்சர் ராஜு

படித்தவர்களையும் ஏமாற்றும் தி.மு.க.,: முன்னாள் அமைச்சர் ராஜு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: “படிக்காத பாமரர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல; படித்து பட்டம் பெற்ற விரிவுரையாளர்களையும் இந்த அரசு ஏமாற்றுகிறது,” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று அளித்த பேட்டி:கடந்த 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் உறுப்புக் கல்லுாரிகளாக செயல்பட்டு வந்த 41 கல்லுாரிகள், ஒரே அரசாணையில் அரசு கலைக் கல்லுாரிகளாக தரம் உயர்த்தப்பட்டன.உறுப்புக் கல்லுாரிகளாக செயல்பட்ட கல்லுாரிகளில், 7,300 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரமாக்கப்படுவர் என கூறப்பட்டது. 536 வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., எதையும் நிறைவேற்றவில்லை.கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசு தரப்பு அவர்களை மிரட்டுகிறது. பல மாநிலங்களில் 50,000 ரூபாய்க்கும் மேல் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.ஆனால், தமிழகத்தில் 25,000 ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்படுகிறது.படிக்காத பாமரர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, படித்து பட்டம் பெற்ற விரிவுரையாளர்களையும் இந்த அரசு ஏமாற்றுகிறது. கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை, தாமதிக்காமல் அரசு நிறைவேற்ற வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இதுகுறித்து பேசுவார். 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடையும்; அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கிரி
பிப் 09, 2025 10:26

கூத்தாடி நிறுவனர் மாதிரி வேஷம் கட்டி ஆடுங்க.


AMLA ASOKAN
பிப் 09, 2025 08:55

இவ்வளவு நாள் இவர் எங்கே இருந்தார் ? 2026 நெருங்கும் வேளையில் மீண்டும் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு கனவுலகில் இருந்து கொண்டு கருத்துக்களை உதிர்க்கிறார் . முதலில் MLA ஆக முயற்சி செய்யட்டும் .


VENKATASUBRAMANIAN
பிப் 09, 2025 07:58

மக்கள் இன்னும் காசுக்கு தானே ஓட்டு போடுகிறார்கள். நீங்களும் திமுகவும் பங்காளிகள் என்பதை ஈரோடு தேர்தல் உறுதி படுத்தி உள்ளது. மக்கள் தெரிந்தே குழியில் விழுகிறார்கள். கடவுள்தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்


Kasimani Baskaran
பிப் 09, 2025 06:42

பட்டையடித்து ஏமாற்றுவது ஆத்தா தீம்க்கா, பட்டையடிக்காமல் பகுத்தறிவு பேசி ஏமாற்றுவது தாத்தா திம்க்கா. இரண்டுக்கும் அவ்வளவு வித்தியாசம் கிடையாது. கபட வேடம் தரித்து பின்புறம் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டே திடீர் என்று பங்காளிகள் என்று சொல்லி ஒருவரை ஒருவர் அணைத்துக்கொள்வர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை