உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அதிக தொகுதிகள் கேட்பதால் தி.மு.க., கோபிக்காது: இ.கம்யூ.,

 அதிக தொகுதிகள் கேட்பதால் தி.மு.க., கோபிக்காது: இ.கம்யூ.,

சென்னை: ''சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகள் கேட்பதால், கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படாது. தி.மு.க., எங்களை விரோதமாக பார்க்காது,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நுாற்றாண்டு விழா, மூத்த தலைவர் நல்லக் கண்ணுவின் 101வது பிறந்த நாள் விழா, மறைந்த மூத்த தலைவர்கள் அமீர் ஹைதர்கான், கே.டி.கே.தங்கமணியின் நினைவுகூரும் விழா, நேற்று சென்னையில் வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்குப் பின், வீரபாண்டியன் அளித்த பேட்டி: தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தில் இயல்பு. மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடாது. நல்லிணக்கத்தை கெடுத்து விடக்கூடாது. தமிழகத்தில் பா.ஜ., பதற்றமான, குழப்பமான அரசியலை செய்கிறது. அந்த அரசியல், தமிழக மக்களின் பண்பாட்டுக்கும், பண்புகளுக்கும் ஏற்புடையதல்ல. தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். வரும் சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து தி.மு.க.,விடம் பேசுவோம். நாங்கள் பேசுவதால், தி.மு.க., கோபம் கொள்ளாது. விரோதமாக செயல்படுகிறோம் என தி.மு.க., எடுத்துக் கொள்ளாது. எங்கள் கட்சியின் மாநிலக் குழுவை கூட்டி, தொகுதி எண்ணிக்கை குறித்து முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை