உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., முக்கிய புள்ளிகள் பா.ஜ.,வுக்கு வர உள்ளனர்

தி.மு.க., முக்கிய புள்ளிகள் பா.ஜ.,வுக்கு வர உள்ளனர்

சென்னை : ''பட்டியலின மக்களுக்கு, மிகப் பெரிய துரோகத்தை திருமாவளவன் இழைத்து கொண்டிருக்கிறார்,'' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார். சென்னையில் அவர் அளித்த பேட்டி: கடந்த 2009 - 2014 வரை மத்தியில் இருந்த தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 879 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, இந்த ஆண்டு மட்டும் 6,666 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையத்திற்கு இணையாக, 800 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகிறது. ஒன்பது இரட்டை வழித்தடங்கள் உட்பட 2,587 கி.மீ., துாரத்திற்கு, 33,467 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் பாதை அமைக்கும் பணி நடக்கிறது. தமிழக வரலாற்றில், ரயில்வேயில் இந்த அளவு பணிகள் நடப்பது இதுவே முதல் முறை. தமிழகத்தில் 38 ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், 13 மாவட்ட மக்கள் பயன் பெறுவர். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்த பின், கடந்த 11 ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளன. பட்டியலின மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை திருமாவளவன் இழைக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பட்டியலின மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, அவர் ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை. பட்டியலின மக்கள் எப்படி போனால் தனக்கென்ன? எம்.எல்.ஏ., - எம்.பி., ஆக வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது. எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு சேரும் கூட்டத்தைப் பார்த்து, ஸ்டாலின் பயத்தில் விமர்சித்து வருகிறார். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும். நான் தமிழக பா.ஜ., தலைவராக இருந்த போது, முக்கியமான பலர் தி.மு.க.,வில் இருந்து பா.ஜ.,வில் இணைந்தனர். தற்போதும் பலர் வர தயாராக உள்ளனர்; அதற்கான பேச்சு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஆக 18, 2025 20:13

திமுகவின் முக்கிய புள்ளிகள் என்றால் ஸ்டாலினும் உதயநிதியுமா?


pakalavan
ஆக 18, 2025 12:48

வண்டுமுருகன் சொன்னது ஒண்ணுகூட இதுவரைக்கும் நடக்கலை, இனிமேலும் நடக்காது, 2021 ல ஆட்சில உக்காருவோம்னு சொல்லிச்சு, 2022 ல உள்ளாட்சில பிஜேபி தனியா நின்னு ஜெயிக்கும் னு சொல்லிச்சு, 2024 ல தமிழகத்தில் பிஜேபி கரனுங்க 18 எம்பி வருவாங்க னு சொல்லிச்சு, ஒன்னும் நடக்கல,


pakalavan
ஆக 18, 2025 12:45

இந்த பீஸுக்கு பயம் வந்துடுச்சு, அதிமுக இருந்து ஒன்னு ஒண்ணா கலண்டு போய்ட்டுஇருக்கு, அளப்பது இந்த வண்டுமுருகனுக்கு பயம் வந்துருச்சு, பித்தலாட்டம் = வண்டுமுருகன்


முக்கிய வீடியோ