சாராய பணத்தில் தி.மு.க., முப்பெரும் விழா: அண்ணாமலை
சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, 'கரூர் மாவட்டத்தில் இரண்டு திருடர்கள் உள்ளனர். ஒன்று செந்தில் பாலாஜி, மற்றொருவர் அவரது தம்பி' என பேசினார். தற்போது, எட்டு ஆண்டுகள் கழித்து, 'உலக மகா உத்தமர் செந்தில் பாலாஜி, மிகச்சிறந்த மனிதர் அவரது தம்பி' என, சான்றிதழ் கொடுக்கிறார். தி.மு.க., முப்பெரும் விழாவே, சாராய காசில் தான் நடத்தப்பட்டது. மூன்று ஆண்டு காலம், அந்த துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் சம்பாதித்த பணத்தில் தான், தி.மு.க., விழா நடத்தப்படுகிறது. திருடர் - ஊழல்வாதி என பட்டம் கொடுத்தவர்களை வைத்தே, முப்பெரும் விழா நடத்தியதை பார்த்தால், 2026 தேர்தலுக்கு, மண் குதிரையை நம்பி, காவிரி ஆற்றை நோக்கி ஸ்டாலின் போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.