உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சியுடன் கூட்டணியா; திருமாவளவன் அந்த தவறை செய்ய மாட்டார்: சீமான் திட்டவட்டம்

விஜய் கட்சியுடன் கூட்டணியா; திருமாவளவன் அந்த தவறை செய்ய மாட்டார்: சீமான் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அந்த தவறை திருமாவளவன் செய்யவே மாட்டார்,'' என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சிலே 5 குண்டு தாங்கி மரணித்து கிடக்கும் போது, தமிழ் தேசியம் பதறி துடித்தது. அதே சமயத்தில் சிறிதும் பதற்றம் இல்லாமல், பதவியேற்றது திராவிடம். இருமொழிக் கொள்கையில், அடுத்தவன் மொழி எப்படி எங்களின் கொள்கை மொழியாகும். எங்க அப்பாவும் அப்பா, அடுத்த வீட்டுக்காரனும் எங்களுக்கு அப்பாவா? எனக்கு கொள்கை மொழி தாய் மொழி தமிழ்தான். மலையாளத்தவர், கன்னடத்தவர், தெலுங்கர் என யாராக இருந்தாலும், அவரவர் மொழி, அவர்களுக்கு கொள்கை மொழி. இந்தி உள்பட எந்த மொழியாக இருந்தாலும் விரும்பினால் கற்போம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zaezpl2r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மும்மொழி கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழி கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை, தமிழே எங்களின் கொள்கை. மதச்சார்பற்ற சமூக நீதி எப்படி? பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு ஏற்றுக் கொள்கிறீர்களா? தி.மு.க.,வும் தான் ரொம்ப நாளாக சமூக நீதி பற்றி பேசிக் கொண்டே இருக்கிறது. அது ஜமுக்காள நீதி கூட கிடையாது. தமிழக அமைச்சரவையில் எத்தனை பெண்களுக்கு இடம் கொடுத்திருக்கிறீர்கள்?

குட்டி கதையல்ல

முத்து ராமலிங்க தேவரும், மூக்கையா தேவரும் பர்மாவுக்கு போறாங்க. இது குட்டி கதையல்ல, கேட்டுக்கோ, வரலாறு! பெண்கள் தரையில் படுத்து முடியை பாய் போல விரிச்சு, அதில் நடந்து போக சொன்னார்கள். ஆனால், இவர்கள் இருவரும் பெண்களை மதிக்கும் நாட்டில் இருந்து வந்தவர்கள் நாங்கள், பெண்களை எழுந்திரிக்கச் சொல்லுங்கள், இல்லையேல் திரும்பி சென்று விடுவேன் என்று சொன்னார்கள். இதுதான் பெண்ணியம் உரிமை.மதுக்கடைகளை மூடச் சொல்கிறது தமிழ்தேசியம். தெருவுக்கு 2 மதுக்கடைகளை திறப்பது திராவிடம். ரெண்டும் ஒன்றா, வில்லனும், ஹீரோவும் ஒன்றா?திராவிடத்தை வளர்க்க நீங்கள் ஏன் கட்சி தொடங்க வேண்டும் என்பதை விஜய் விளக்க வேண்டும். விஜய்யின் கொள்கைகள் அடிப்படையிலேயே தவறாக உள்ளன.திராவிடமும், தமிழ் தேசியமும் வேறு வேறானவை. இரண்டும் கொள்கையாக இருக்க முடியாது. ஒன்று கொள்கையை மாற்றுங்கள் அல்லது எழுதிக்கொடுப்பவரை மாற்றுங்கள்.தம்பி என்னும் உறவு வேறு. கொள்கை என்பது வேறு. காங்கிரஸ் வரலாற்று பகைவன். நாடு ஏழ்மை, வறுமையில் சிக்கித் தவிப்பதற்கு காரணம் காங்கிரஸ். கச்சத்தீவை தூக்கி கொடுத்தது காங்கிரஸ். காவிரி தண்ணீர் பிரச்னைக்கு தொடர்ந்த வழக்கை இந்திரா சொன்னதை கேட்டு, ஆட்சி மீதான பயத்தில் திரும்பபெற்றவர் கருணாநிதி. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல். இந்தியை திணித்தது காங்கிரஸ். உலகெங்கும் மொழியின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று விஜய் கொள்கையை மாற்ற வேண்டும். இல்லை எழுதி கொடுப்பவனை மாற்ற வேண்டும். கவர்னரே தேவையில்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு. கவர்னரை வேண்டாம் என்று சொல்லும் விஜய், அதற்கான காரணத்தை சொல்வாரா? மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், ஆந்திராவில் 20 தமிழர்கள் கொன்ற சம்பவங்கள் குறித்து விஜய் குரல் கொடுப்பாரா? மஞ்சள் மங்களகரமானது. பச்சை துண்டு போட்டு போராடுவது புரட்சி இல்லையா? சிவப்பு துண்டு போட்டால்தான் புரட்சி செய்ய முடியுமா? அம்பேத்கர், ஈ.வெ.ரா.,வை படிங்க என்று விஜய் சொல்லும் போது, எனக்கு சிரிப்பு தான் வருகிறது. திராவிடம் என்பது தமிழா? சமஸ்கிருதமா? விஜயுடன் திருமாவளவன் கூட்டணி வைக்க மாட்டார். என்னிலும் முதிர்ந்தவர். அனுபவமும், அரசியல் அறிவும் பெற்றவர் திருமாவளவன். அவருடைய மாணவர்கள் தான் நாங்கள். நானே இவ்வளவு நிதானமாக இருக்கும் போது, எங்கள் அண்ணன் எவ்வளவு ஆழமா சிந்திப்பார் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர் அந்த தப்பை பண்ண மாட்டாரு. உறுதியாக சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எதுவும் கணக்கு போடக் கூடாது. நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் கூடினார்கள். விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியிருக்கிறது?இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

selvaraj
நவ 02, 2024 22:27

இத்தாலி ல இருக்கிறவன் இத்தாலியில் படிக்கிறான். பிரான்ஸ் ல இருக்கிறவன் பிரெஞ்சு மொழியில படிக்கிறான். அடுத்த நாட்டுக்காரனோட பேச தேவைன்னா மொழி கத்துகிறான். சொந்த தாய்மொழியில் படிச்சு முன்னேறுறான். நாம புரியாத மொழியில் படிச்சு விளங்காம போறோம்.


கல்யாணராமன் சு.
நவ 02, 2024 20:33

"மும்மொழி கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழி கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை, தமிழே எங்களின் கொள்கை." ......... அப்போ தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கும் மக்களுடன் என்ன மொழியில் பேசுவீர்கள் ? ஆட்சி மொழியாக தமிழை மட்டும் வைப்பீர்களா ? இப்போது மற்ற நாடுகளில் இருக்கும் மக்களுடன் தமிழில் மட்டுந்தான் பேசுகிறீர்களா ?? என்ன பிதற்றல் இது ?


தமிழ்வேள்
நவ 02, 2024 22:57

வேற எதுல? பே.பே.பே பாஷையில் தான்..ஆமை எந்த மொழியில் பேசும்?


theruvasagan
நவ 02, 2024 20:30

எதுக்கு இந்த பதட்டம் படபடப்பு எல்லாம். தும்பி புல்லிங்கோஸ் எல்லாம் கழட்டிக்கொண்டு நடிகன் பக்கம் ஓடிப் போயிடுமோ என்கிற பயந்தானே.


rajan_subramanian manian
நவ 02, 2024 18:23

அப்போ அவர் தீமுகாவிலேயே இருக்க வேண்டும் என்று எண்ணமா? குருமா ஏதோ சில சீட்டும் கைச்செலவுக்கு பணமும் கிடைப்பதால் அங்கே உள்ளார். விஜய் அதைவிட கொஞ்சம் கூட கொடுப்பதாக சொன்னால் அம்பேத்கர்,பெரியார்,samooga நீதி என்று கூவிவிட்டு அங்கே செல்வார். நீர் ஒன்றும் தரமாட்டீர் ஆகவே உன்னிடம் வரமாட்டார். பிஜேபி அதைவிட அதிகம் தந்தால் அங்கே போகவும் தயங்காத வீரமுள்ள தன்மானமிக்க தமிழனிடம் வீண் விளையாட்டு வேண்டாம்.


வைகுண்டேஸ்வரன்
நவ 02, 2024 18:18

இன்னொரு ம ந கூ உருவாகலாம். சீமான், விஜய், திருமா, பிரேமலதா. இன்னொன்று பாமக, பாஜக, ஓ பி எஸ், வாசன், கிருஷ்ணசாமி, ttv தினகரன், பாரிவேந்தன், ஜான் பாண்டியன். திமுக கூட்டணி யை மீண்டும் ஸ்டாலின் கட்டமைத்து விடுவார். திருமா மட்டும் போயிடுவார். அதனால பெரிய நட்டம் எதுமில்லை. அதிமுகதான் அம்போ ன்னு நிக்கறது. அதிமுக வின் 26% வாக்கு வங்கி யில் ஏற்கனவே 5-6% போயிடுச்சு. இன்னொரு 7-8% போயிடும்.


SK
நவ 02, 2024 17:24

அது அவர் முடிவு. இவர் கூட வரலன்னு வறுத்தமா?


sundarsvpr
நவ 02, 2024 15:07

காங்கிரஸ் பொதுவுடைமை விடுதலை சிறுத்தை போன்றகட்சிகள் தி மு க கூண்டில் அடைபட்ட பறவைபோல். வெளியில் வந்தால் சுதந்திர பறவைகள். கூண்டிற்குள் அவைகள் கத்திக்கொண்டு இருக்கும். இதுதான் அரசியல் வேடிக்கை. மக்கள் ரசிக்கிறார்கள்.


kulandai kannan
நவ 02, 2024 14:52

டம்ளருக்கு பேஸ்மென்ட் ஆடி விட்டது.


angbu ganesh
நவ 02, 2024 14:41

இப்படித்தான் ஒன்னும் இல்லாதவனுங்களை ஏத்தி விடறது அப்புறம் நடிகனுக்கு என்ன தெரியும், மக்கள் பிரச்சினைக்குபிரச்சினையே இந்த அரசியல் வியாதிங்கள்தான் VARUVADHILLAI நடிப்பதை தவிரன்னு கூவ வேண்டியது. ஏன்டா இவ்ளோ நாள் அரசிலுள்ள இருக்கற குருமா நீ விஜயோட ஜோடி சேர்ந்து ஆட்டம் போடா நினைப்பது ஏனோ அவர் புது ஹீரோயின்களுக்கு மட்டுமேதான் சான்ஸ் தருவார்


வைகுண்டேஸ்வரன்
நவ 02, 2024 14:15

திருமா சீமான் னோட அண்ணனா? விஜய் சீமான் னோட தம்பி யா? அப்ப திருமா வுக்கு விஜய் யாரு? சீமான் கும்பல், திருமாவோட மாணவர்களா? பெண்களின் மரியாதை பற்றி சீமான் பேசறானா? காளியம்மாள் என்கிற பெண்மணியை பிசுறு என்று சொன்னவன் தானே இவன்??


சமீபத்திய செய்தி