உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காசி ஆன்மிக பயணம் போக விருப்பமா: அழைக்கிறது அறநிலையத்துறை!

காசி ஆன்மிக பயணம் போக விருப்பமா: அழைக்கிறது அறநிலையத்துறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடப்பு 2024-25ம் ஆண்டிற்கான ஆன்மிக பயணமாக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச்செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.இதன்படி, தமிழ்நாட்டில், மண்டலத்திற்கு 21 நபர்கள் வீதம் 420 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க என்ன நிபந்தனைகள்:* ஹிந்து மதத்தை சேர்ந்தவர், கடவுள் நம்பிக்கை உடையவர் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.* 60 வயது முதல் 70 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும்.(வயது சான்று இணைக்க வேண்டும்)*ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். (வருமான சான்று இணைக்க வேண்டும்)* 10 நாட்கள் சென்று வரும் இந்த ஆன்மிகப்பயணத்திற்கு உடல் தகுதிற்கான அரசு மருத்துவர் சான்று இணைக்க வேண்டும்.*தற்போது வசிக்கும் நிலையான முகவரி இணைக்க வேண்டும்.* ஆதார் அல்லது பான்கார்டு என் அட்டை நகல் இணைக்க வேண்டும்.*இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையர் மண்டலத்திற்கு தலா 21 பேர் வீதம் 420 விண்ணப்பங்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.* விண்ணப்பிக்க கடைசி தேதி 16-12-24க்குள் அனுப்ப வேண்டும்.* தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேவையான அத்தியாவசிய மருந்துகள் எடுத்து வரவேண்டும்.* சிறு குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.* பயணத்தின்போது மிக விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது.* தேர்வு செய்யப்படுவோர் ஆன்மிகப்பயணத்திற்கு முதல் நாளே தமது சொந்த செலவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அலுவலகத்தில் வருகை பதிவு செய்ய வேண்டும். அதே போல பயணம் நிறைவுக்கு பிறகு தமது சொந்த செலவில் அவரவர் இருப்பிடத்திற்கு திரும்ப வேண்டும்.* காசி ஆன்மிகப்பயணம் ஒரு முறை மட்டுமே மானியம் பெற தகுதியானவர் என்பதால் இதற்கு முன் அரசு செலவில் காசி ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது.மேற்கூறிய நிபந்தனைகளின்படி, விண்ணப்பங்களை தமது விலாசம் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற வலைதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரிஇணை ஆணையர் அலுவலகம்இந்து சமய அறநிலையத்துறை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anandan Kesavan
நவ 03, 2024 23:18

அறநிலையத்துறை வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்


P.KUMAR
நவ 03, 2024 11:20

70 வயதை கடந்தவா்களில் பெரும்பாலானவா்களுக்கு காசிக்கு செல்வதற்கு வாழ்க்கையில் இதுவரையிலும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அப்படிபட்டவா்களும் இதை பயன்படுத்தி கொள்வதற்கு ஏதுவாக விதிகளை அமைக்க வேண்டும். இந்த ஆன்மீக சுற்றுலாவை அரசு நடத்துவதில் பலன் ஏதும் ஏற்படாது.


ஈஸ்வரி ஈஸ்வரி
நவ 03, 2024 10:55

நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் திருநீலகண்டம் என் வயது ஈஸ்வரி எனக்கு 54 வயதாகிறது நான் போகலாமா காசிக்கு இந்த பதிவை நான் பூர்த்தி செய்யலாமா


Svs Yaadum oore
நவ 03, 2024 06:11

60 வயது முதல் 70 வயது உட்பட்டவராக இருக்க வேண்டுமாம் .வயது சான்று இணைக்க வேண்டு.....இது என்னய்யா சட்டம் ??...70 வயதுக்கு மேல் உள்ளவன் காசி ஆன்மிக பயணம் போக வேண்டாம்னு திராவிட மாடல் சொல்லுதா ??.....இதுதான் சமத்துவம் சகோதரத்துவம் சமூக நீதி மத சார்பின்மையா ??.....இவனுங்க அப்பன் வீட்டு பணத்தில்தான் இந்த ஆன்மிக பயணம் நடத்தறாங்களா ??....


கிஜன்
நவ 02, 2024 21:55

நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் .... வசதியுள்ளவர்கள் அரசை எதிர் பார்க்க மாட்டார்கள் ... 70 வயது முதியவரிடம் வருமான சான்று வேண்டும் என்று கேட்டால் எப்படி ? அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு நியாயமான வகையில் பயனாளிகள் தேர்வு செய்யவேண்டும் ... இது போன்ற நிபந்தனைகள் ஹஜ் பயணத்திற்கே இல்லை ...


rama adhavan
நவ 02, 2024 21:33

இத்தனை கட்டுப்பாடு விதித்தால் யார் வருவார். மாடல் தான் செல்லும்.அதற்கு இருக்கும் இடத்தில் இருந்து நேராக ஒரு 2000 ரூ செலவு செய்தால் எந்த வயதிலும் சுலபமாக 10 நாள் போய் வரலாம்.


Balakumar V
நவ 02, 2024 21:05

நன்றி. வணக்கம்.


Pandi Muni
நவ 02, 2024 19:55

அறிவிப்பு மற்றும் vinnappam s://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/149/document_1.pdf


KRISHNAN R
நவ 02, 2024 19:40

நாங்க ரொம்ப நல்லவங்க...


Renukadevi,Srirangam
நவ 02, 2024 18:21

விபரம் தெரிந்தவர்கள் யாராவது இந்த திராவிடமாடல் அரசின் அறநிலையத்துறையை நம்பி காசிக்கு ஆன்மீகப் பயணம் போவார்களா? அதையும் மீறி போகிறவர்களுக்கு நம் அனுதாபங்களை தெரிவிப்பதை தவிர வழியில்லை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை